ETV Bharat / state

ஐ.டி.ஊழியர் உள்பட பலரிடம் ரூ.6 கோடி வரை மோசடி! வங்கி மேலாளர் சிக்கியது எப்படி? - திருவள்ளூர் பண மோசடி விவகாரம்

Bank Manager Arrest: ஐ.டி.ஊழியர் உட்பட பலரிடம் ரூ.6 கோடி வரை மோசடி செய்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bank manager arrested in Tiruvallur for money defrauding
திருவள்ளூரில் பணம் மோசடி செய்த வங்கி மேலாளர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 1:27 PM IST

திருவள்ளூர்: கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகரைச் சேர்ந்தவர் கிரிபிரசாத்ராவ்(44). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி.சி இன்போடெக் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி (40) என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு இவரது பள்ளிப்பருவ பெண் நண்பரான காயத்ரி மூலம் இவருக்கு, சென்னை தியாகராய நகர் தனியார் வங்கியில் அப்போது மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜ்குமார் (38) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

இந்த ராஜ்குமார் மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர். இவர் பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜ்குமார், பி.எம்.எஸ் என்ற நிறுவனத்தில் பணம் செலுத்தினால் மாதா மாதம் பங்குத்தொகை அதிகம் கிடைக்கும் என்றும், எப்போது கேட்டாலும் முழுத்தொகையையும் திருப்பி தருவதாகவும் கிரிபிரசாத்ராவிடம் கூறியுள்ளார்.

இதை நம்பிய கிரிபிரசாத்ராவ், கடந்த 2021 ஏப்ரல் மாதம் 3 லட்சம் ரூபாயினை வங்கி மூலம் அனுப்பி உள்ளார். பின் அதே மாதம் 5ஆம் தேதி 10 லட்சமும், தொடர்ந்து 8ஆம் தேதி ரூ.5 லட்சமும், செப்டம்பர் 13ஆம் தேதி ரூ.30 லட்சமும் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அவரை முழுவதுமாக நம்பிய கிரிபிரசாத்ராவ், 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.5 லட்சம், 2023ஆம் ஆண்டு ரூ.60 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தமாக 1 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர், கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முறையாக பங்குத் தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து, அப்போது திருவள்ளூர் காக்களூர் பகுதியில் உள்ள மற்றோரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜ்குமாரிடம், தான் கொடுத்த 1.13 கோடி ரூபாய் பணத்தை கிரிபிரசாத் கேட்டுள்ளார்.

அப்போது, கேட்ட பணத்தை உடனடியாக தருவதாகக் கூறி வந்த ராஜ்குமார், திடீரென தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது செல்போனும் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிரிபிரசாத்ராவ், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பவானி மீது நம்பிக்கை பண மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஓராண்டாக விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த தொடர் விசாரணையில், திருவேற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு ராஜ்குமார் வந்ததாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று, ராஜ்குமாரை கைது செய்தனர்.

பின் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனர். ராஜ்குமார் இதேபோல் அதிக பங்குத்தொகை தருவதாக பலரிடம் 6 கோடி ரூபாய் வரை வங்கி மேலாளராக இருந்து கொண்டே மோசடி செய்துள்ளது தெரிய வந்திருப்பதாக, தற்போது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே ஒவ்வொரு வங்கியில் இருந்தும் இவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, பல வங்கிகளில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாமக, விசிகவினர் மோதல்; திண்டிவனம் மயான கொள்ளை ஊர்வலத்தில் பதற்றம்.. போலீசார் தடியடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.