ETV Bharat / state

சென்னைக்குள் இரவில் ஆம்னி பேருந்துகள் செல்ல தடை! மீறினால் கடும் நடவடிக்கை.. - Ban on omnibus to enter Chennai

Restriction for Omni Buses in Chennai: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் இன்று (ஜன.24) முதல் மாலை 7 மணிக்கு மேல் சென்னை மாநகருக்குள் செல்ல தடை விதிக்கப்படுவதாகவும், அதனை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Restriction for Omni Buses in Chennai
இரவில் ஆம்னி பேருந்துகளுக்கு சென்னைக்குள் அனுமதி இல்லை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 10:07 AM IST

Updated : Jan 24, 2024, 10:19 AM IST

சென்னை: சென்னை மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக ஆம்னி பேருந்துகள், விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்பேட்டில் இருந்து செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.

பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இது குறித்து மாநில போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், "பொதுமக்களின் நலன் கருதி சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை இயக்கப்பட வேண்டும் எனவும், வட மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகள் மட்டும் கோயம்பேடு வரை இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூடத்தில் SETC, MTC, TNSTC, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆட்டோ ரிக்‌ஷா சங்கங்கள், நெடுஞ்சாலை காவல்துறை, சென்னை மற்றும் தாம்பரம் நகரக் காவல் ஆணையரகங்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொங்கல் விடுமுறைக்கு, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர், டிசம்பர் 28 ஆம் தேதி, மாநில போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்துகள் சங்கத்திருடன் நடந்த கூட்டத்தில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பொங்கலுக்குப் பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து, ஜனவரி 13ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் தலைமைச் செயலாளர் மேற்கொண்ட ஆய்வின் போது, ​ஜனவரி ​24ஆம் தேதி இரவு முதல், SETC மற்றும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. நகரின் காற்றின் தர மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டும்

சென்னை நகரத்தின் போக்குவரத்தை குறைக்க, சென்னை புறநகர் மற்றும் எல்லையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கிளம்பாக்கத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்கப்படுவதை மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

மேலும், SETC பேருந்துகள் ஜனவரி 24ஆம் தேதி இரவு முதல் கிளம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்கத் தொடங்கும் போது, ​​ஆம்னி பேருந்துகள் நகருக்குள் நுழைய அனுமதிப்பது நல்லதல்ல. இதனால் மாநில அரசு மற்றும் மாநில விரைவு போக்குவரத்து கழகத்திற்கு (SETC) பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.

ஆம்னி பேருந்துகளுக்காக முதல் தளத்தில் 27 முன்பதிவு கவுன்டர்கள், 300 தங்குமிடங்கள், ஆம்னி பேருந்துகளுக்கு 77 நிறுத்துமிடங்கள், 67 பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கான் இடங்கள். மேலும் ஆம்னி பேருந்துகளுக்காக முடிச்சூரில் 5 ஏக்கர் நிலம் என பல்வேறு வசதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 250 ஆம்னி பேருந்துகளுக்குக் குறையாமல் நிறுத்த முடியும். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பண்டிகை நாட்களில் கூட பேருந்து சீராக இயக்குவதை உறுதி செய்யலாம். அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும், ஜனவரி 24ஆம் தேதி இரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த உத்தரவு இன்றிரவு 7 மணி முதல் அமலுக்கு வரும். இதனை மீறி சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் சென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என‌ அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் - மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!

Last Updated : Jan 24, 2024, 10:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.