ETV Bharat / state

"குற்றவாளிகளை பிடிக்க போகல" பெண் காவலர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ஆணையர் விளக்கம்! - TN POLICE DIED

"எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதை போல் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர்கள் இருவரும் பணி ரீதியாக செல்லவில்லை" என ஆவடி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

உ யிரிழந்த பெண் காவலர்கள்
உ யிரிழந்த பெண் காவலர்கள் (Photo Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 10:30 PM IST

சென்னை: சென்னை மாதாவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் பணியாற்றிய வந்தவர்கள் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் பெண் காவலர் நித்தியா. இவர்கள் இருவரும் இன்று அதிகாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறு நாகலூர் என்ற இடத்தில் (புல்லட்)இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டு இருக்கும் போது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டனர்.

இதில் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண் காவலர் நித்தியாவை, அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நித்தியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்த பெண் காவலர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களது உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு!

குற்றவாளியைப் பிடிக்கச் சென்றபோது விபத்து? இந்தநிலையில் இரண்டு பெண் காவலர்களும் குற்றவாளியைப் பிடிக்கச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் பரவியது. இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,"காவல் துறையினருக்கு, குறிப்பாக பெண் காவலர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராத இந்த திமுக அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

இந்த அரசின் அஜாக்கிரதையால் பணியின்போது உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், இனிமேலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்து இருந்தார்.

காவல் ஆணையர் மறுப்பு: இந்தநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதைப் போல சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர்கள் இருவரும் அலுவலகப் பணி ரீதியாக செல்லவில்லை என ஆவடி காவல் ஆணையர் சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது," மேல்மருவத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த பெண் எஸ்ஐ ஜெயஸ்ரீ மற்றும் பெண் காவலர் நித்யா ஆகிய இருவரும் பைக்கில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள்.

குறிப்பாக அவர்கள் இருவரும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக அலுவலக பணி ரீதியாகவும் இருசக்கர வாகனத்தில் சென்றார்கள் என்பது முற்றிலும் தவறான தகவல். இருவரும் அவர்களது சொந்த வாகனத்தில் சென்றுள்ளதாகவும், இதில் ஒருவர் விடுப்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.