ETV Bharat / state

ஒரு வாரத்துக்கு இதான் ரூட்டு.. சென்னைவாசிகள் கவனத்திற்கு!

Traffic diversion in Chennai: அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் காரணமாக, அடுத்த ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ பணிகள் விறுவிறுப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 3:34 PM IST

சென்னை: அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம், ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், மார்ச் 11 முதல் 17 வரை ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்த வகையில், சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள், காலேஜ் ரோடு, ஹாடோஸ் ரோடு, உத்தமர் காந்தி சாலை வழியாக, ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை, டாக்டர் எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள், டேங்க் பண்ட் சாலையில் இடதுபுறம் திரும்பி, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.

வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு தங்கள் இலக்கை அடையலாம்.

மற்ற பிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிப்பாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி மாற்றப்படும்” என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: குண்டாஸ் முடிந்து வெளிவந்தவர் தொடர் வழிப்பறி.. போலீசார் சுற்றி வளைத்தது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.