ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க விவகாரம்: விஜயகாந்த் விஷயத்தில் எப்படி அனுமதி அளிக்கப்பட்டது?- அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - armstrong burial issue

விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்று தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் கேள்வி எழுப்பினார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யும் விவகாரத்தில் நீதிபதி இக்கேள்வியை எழுப்பினார்.

ஆம்ஸ்ட்ராங், சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்
ஆம்ஸ்ட்ராங், சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (Image Credit -ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 2:00 PM IST

சென்னை: சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வது குறித்த விவகாரத்தை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரித்து வருகிறது. மதியம் 12 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'ஆம்ஸ்ட்ராங் உடலை நாளை வரை பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்திருக்க முடியாது. எனவே, அரசு சொல்லும் இடத்தில் முதலில் அவரின் உடலை அடக்கம் செய்யுங்கள். பின்னர் மணிமண்டபம் கட்டிய பின் உடலை எடுத்து மீண்டும் அங்கு அடக்கம் செய்து கொள்ளுங்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் அவரது உடல் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டது. அதுபோல அடக்கம் செய்யலாம். அமைதியான முறையில் முதலில் இறுதி சடங்குகளை முடியுங்கள்' என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

அப்போது, 'ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் விவகாரத்தில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது' என்று மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி,' விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது?' என்று அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, 'விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் அனுமதி வழங்கினார்' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, 'அரசாங்கம் அனுமதி அளித்தால் கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்து கொள்ளலாம். மாநகராட்சி அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்த பின்னர் தான் அனுமதி மறுக்கப்பட்டது. சட்டத்தை மீறி உத்தரவு பிறப்பிக்க முடியாது' என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.

அப்போது, 'ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் குறி்த்து மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்' என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த பின்னர், அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யும் விவகாரம்: வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.