ETV Bharat / state

“கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு சரி.. ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கு?” - அறிவுச்சமூகம் கோருவது என்ன? - SC ST Welfare Schools Issue - SC ST WELFARE SCHOOLS ISSUE

Arivusamoogam Organisation: கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மட்டுமல்லாது, ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைத்து நலத்துறைப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கும் முடிவைக் கைவிடுவோம் என சட்டமன்றத்தில் அறிவிப்பதோடு அரசாணையாகவும் வெளியிட வேண்டும் என அறிவுச்சமூகம் அமைப்பின் தலைவர் தமிழ்முதல்வன் தெரிவித்துள்ளார்.

'அறிவுச்சமூகம்' அமைப்பின் தலைவர் தமிழ்முதல்வன்
'அறிவுச்சமூகம்' அமைப்பின் தலைவர் தமிழ்முதல்வன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 4:47 PM IST

Updated : Sep 2, 2024, 7:43 PM IST

மதுரை: கள்ளர் சீரமைப்பு உள்ளிட்ட ஆதிதிராவிடர், வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறையால் நடத்தப்படும் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கப்படும் என்ற அறிவிப்பை பல்வேறு அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கமாட்டோம் என அண்மையில் தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

'அறிவுச்சமூகம்' அமைப்பின் தலைவர் தமிழ்முதல்வன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு மட்டும் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, மற்ற பள்ளிகளுக்கும் அதுபோன்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட வலியுறுத்தி, 'அறிவுச்சமூகம்' அமைப்பின் தலைவரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கள்ளர் பள்ளிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தமிழ்முதல்வன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், "கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இந்த விளக்கத்தை அறிவுச்சமூகம் வரவேற்கிறது. அதேவேளையில், விளக்கமளித்தால் மட்டும் போதாது. சட்டமன்றத்திலும் அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின்போது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, கள்ளர் சீரமைப்பு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைப்பதாக அறிவித்தார். ஆனால், தற்போது கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை மட்டும் இணைக்கமாட்டோம் என்று விளக்கமளித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

மேலும், அவசர அவசரமாக கள்ளர் சீரமைப்புப்பள்ளிகளை மட்டும் இணைக்கமாட்டோம் என தமிழக அரசு அறிவித்திருப்பது, பட்டியல், பழங்குடியினர் மீதான அலட்சியப்போக்கை மட்டுமன்றி, அவர்கள் மீதான வஞ்சகப்போக்கையே காட்டுகிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான வாக்கு விழுக்காட்டைக் கொண்டுள்ள பட்டியல் சமூக மக்கள் தங்களது நலத்திற்காக உருவாக்கப்பட்ட இப்பள்ளிகள் பறிபோவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

பட்டியல், பழங்குடி சமூகங்களின் வாக்கு பலத்தால் தான் திமுக ஆட்சி நிலைபெற்றுள்ளதை இந்த அரசு உணர வேண்டும். எதிர்வரும் காலங்களிலும் இந்த வாக்கு விழுக்காட்டை கவனத்திற்கொண்டு, ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைத்து நலத்துறைப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கும் முடிவைக் கைவிடுவோம் என சட்டமன்றத்தில் அறிவிப்பதோடு அரசாணையாகவும் வெளியிட வேண்டும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளுக்கென தனி இயக்குநரகமும் அமைத்திட வேண்டும்" என்று கோரிகை விடுத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பட்டியலினத்தவர் என்பதால் கடை வாடகைக்கு விட எதிர்ப்பு? திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

Last Updated : Sep 2, 2024, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.