சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ நகரில் நேற்று(வியாழக்கிழமை) முதல் நாள் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், முதலமைச்சர் முன்னிலை ஆறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது நிறுவனங்களை தொடங்க புதிய ஒப்பந்தகளில் கையெழுத்திட்டுள்ளன.
The first day in San Francisco has set a promising tone for the days to follow!
— M.K.Stalin (@mkstalin) August 30, 2024
Secured investments exceeding ₹900 crores at Chennai, Coimbatore, Madurai, and Chengalpattu, paving the way for 4,100 new jobs in multiple sectors!
🔹 Nokia - ₹450 crore, 100 jobs
🔹 PayPal -… pic.twitter.com/1q6sH7Qgjb
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (29.8.2024) அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன" எனக் கூறப்பட்டுள்ளது
கோவையில், ரூ.150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்(Yield Engineering Systems) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 300 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சென்னை செம்மஞ்சேரியில், ரூ.250 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க மைக்ரோசிப் டெக்னாலஜி(Microchip) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 1,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
அதேபோல், நோக்கியா நிறுவனம் ரூ.450 கோடி, பேபால் நிறுவனம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.50 கோடி முதலீடு மற்றும் 700 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் இனி தாமதம் இருக்காது: புதிய தலைவர் எஸ்.கே.பிரபாகர் உறுதி