சென்னை: அப்போலோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவைச் சேர்ந்த முத்துக்குமரனின் வழிகாட்டுதலின் கீழ், 1.2 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு டக்டல் ஸ்டென்டிங் மற்றும் 4 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு விஎஸ்டி டிவைஸ் க்ளோஸ்சர் [VSD device closures] போன்ற சிகிச்சை முறைகளின் மூலம் குணமடைய செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய குழந்தை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் நெவில்லே ஏஜி சாலமன், “இதய பராமரிப்பு தொடர்பான முழுமையான அணுகுமுறையில் இங்கு சிகிச்சை அளிக்கபடுகிறது. இந்த சிறப்பு அணுகுமுறையில் அறுவை சிகிச்சை மற்றும் குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.
சிக்கலான இதய பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு உகந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவைசிகிச்சை அல்லாத போன்டன் [Fontan procedure without surgical intervention] மருத்துவ நடைமுறையானது புதுமையானது. இங்கு நோயாளியை மையமாகக் கொண்ட இந்த புதுமையான சிகிச்சையை வழங்குகிறோம்” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய குழந்தைகள் இருதய நோய் நிபுணர் முத்துக்குமரன் கூறும்போது, “சிங்கிள் வென்ட்ரிக்கிள் இதய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு, நவீன போன்டன் மருத்துவ நடைமுறையில் சிகிச்சை வழங்கி வருகிறோம். மேலும் நோயாளிகள் இப்போது 2 அல்லது 3 நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.
இதனால் அவர்கள் குணமடையும் காலம் வெகுவாக குறைந்திருக்கிறது. இது வரையில் 12 அறுவைசிகிச்சை அல்லாத போன்டான் மருத்துவ நடைமுறைகளை பின்பற்ற செய்துள்ளோம். மேலும் சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்பானது 2 ஆண்டுகள் தொடரும் அதனால் அவர்கள் தொடர்ந்து கண்காணிப்படுகிறது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோவை அரசு மருத்துவமனையில் விரைவில் 'ரிச் பேண்ட்' - பாதுகாப்பு அம்சங்கள் குறித்து டீன் நிர்மலா அளித்த விளக்கம்!