ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் ஒரு செல்போன் சிக்கியது! அப்டேட் என்ன? - armstrong murder case - ARMSTRONG MURDER CASE

சென்னையை அடுத்துள்ள வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் 2வது நாளாக, மீட்புக் குழுவினர் தேடுதலில் ஈடுபட்ட போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு செல்போனின் உதிரி பாகங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேடுதல் பணியில் ஈடுபட்ட மீட்பு படை குழுவினர்
தேடுதல் பணியில் ஈடுபட்ட மீட்பு படை குழுவினர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 8:23 AM IST

சென்னை: சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அருள், திருவேங்கடம்ராமு கொலைக்கு சதி திட்டம் தீட்டிய முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முன்னாள் அதிமுக நிர்வாகி மலர்கொடி தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஹரிகரன் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதில் ரவுடி திருவேங்கடம் போலீசார் கஸ்டடியை எடுத்து விசாரணை மேற்கொண்ட போது போலீசாரை தாக்கி விட்டு ஓட முயற்சித்த போது ரவுடி திருவங்கடத்தை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்கள் அதிமுக முன்னாள் நிர்வாகியும், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினருமான ஹரிதரனிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து, செம்பியம் தனிப்படை போலீசார் ஹரிதரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் செல்போன்களை சேதப்படுத்தி வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில், மெரினா கடற்கரை மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடங்கினர். முதல் நாள் நீரில் மூழ்கி தேடுதலில் ஈடுபட்டதில் 4 செல்போன்களின் பாகங்கள் மட்டும் தனித்தனியாகக் கிடைக்கப்பெற்றது.

இரவு நேரம் தேடுதலைத் தள்ளி வைத்து நேற்று காலை மீண்டும் பணியைத் தொடங்கினர். சுமார் 6 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மேலும் மற்றொரு செல்போனின் பாகங்கள் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து மீட்கப்பட்ட செல்போன்களை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து தேடுதல் பணியை மீட்புக் குழுவினர் நிறைவு செய்தனர். தொடர்ந்து மீட்கப்பட்டுள்ள செல்போனின் ஐஎம்இஐ (IMEI number) எண்ணைக் கண்டுபிடிக்கும் நோக்கில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி கண்டுபிடித்தால் அந்த சிம்கார்டிற்கு எந்தெந்த எண்ணில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. இதிலிருந்து எந்த எண்ணிற்கு அழைப்பு சென்றுள்ளது என்பதைப் போன்ற விவரங்கள் எல்லாம் பெற முடியும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருப்பத்தூரை அதிர வைக்கும் ஜிஎஸ்டி மோசடி.. சாமானிய மக்களை குறிவைக்கும் கும்பலின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.