ETV Bharat / state

கரூரில் தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமை..அடுத்தடுத்து புகாரில் சிக்கும் திமுக பிரமுகர்! - dmk executive - DMK EXECUTIVE

Complaint Against Dmk Executive: கரூரை சேர்ந்த திமுக பிரமுகர் மீது அடுத்தடுத்து கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகர் மீது புகாரளித்த முருகன், போதும்மணி
திமுக பிரமுகர் மீது புகாரளித்த முருகன், போதும்மணி (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 1:05 PM IST

கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள முள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்- போதும்மணி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முருகன் கோடைக் காலங்களில் ஐஸ் வியாபாரமும் மற்ற நேரங்களில் கூலி வேலை செய்து வருகிறார்.

போதும்மணி பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சிங்கம்பட்டிசேர்ந்த திமுக பிரமுகர் திருவேங்கடம் என்பவரிடம் இரு தவணைகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் முருகன் கடனாய் பெற்றதாகத் தெரிகிறது. இதற்கு முறையான வட்டி செலுத்தி வந்ததாகவும் இதுவரை ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் வாங்கிய கடனுக்கு வட்டி சேர்த்து மேலும் 3 லட்சத்து 44 ஆயிரம் செலுத்த வேண்டும். அதற்கு மாதம் வட்டி 51 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என திமுக பிரமுகர் திருவேங்கடம் நிர்பந்திப்பதாகக் கூறப்படுகிறது.

ஆட்களை வைத்து மிரட்டல்: இதனைக் கொடுக்கக் கூடுதல் அவகாசம் வேண்டும் என முருகன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருவேங்கடம், அவரது உறவினர்களான ஆனந்த், ரவி ஆகியோருடன் சேர்ந்து முருகனை சரமாரியாக தாக்கியதாகவும், இதில் அவரது பற்கள் உடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று முருகன் மற்றும் அவரது மனைவி போதும்மணி புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முருகன் கூறுகையில், "குடும்ப தேவைக்காகத் தான் பெற்ற கடன் தொகை ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே. அதற்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் வரை செலுத்திய பிறகும், கூடுதல் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இதுகுறித்து பாலவிடுதி காவல் நிலையத்தில் (palaviduthi police station) புகார் அளிக்கச் சென்றால் வெளியே வருவதற்குள் திமுக பிரமுகருக்குத் தகவல் கூறி விடுகிறார்கள்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலவிடுதியைச் சேர்ந்த டீக்கடைக்காரர் மகாராஜா என்பவர் திருவேங்கடத்தின், கந்துவட்டி கொடுமைக்கு எதிராக அளித்த புகார் ஊடகங்களில் வெளியானது. இதனை பார்த்து தனக்கும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புகார் அளிக்க வந்துள்ளோம்" என முருகன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதுகுறித்து அவரது மனைவி போதும்மணி கூறுகையில்,"குடும்பத் தேவைக்காக வாங்கிய கடனை அடைக்க தாலி உட்பட அனைத்து நகைகளையும் அடமானம் வைத்து ரூ.3 லட்சம் ரூபாய் வரை செலுத்திவிட்டோம். இருப்பினும் திருவேங்கடம் என்பவர் அடியாட்களை வைத்துக்கொண்டு கூடுதல் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுகிறார். மேலும் இதுவரை செலுத்திய பணத்திற்குக் கணக்கு கேட்ட என்னுடைய கணவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

அடுத்தடுத்து புகாரில் சிக்கும் திமுக பிரமுகர்: கரூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் திருவேங்கடம் மீது அடுத்தடுத்து கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக விளக்கம் கேட்க ஈடிவி பாரத் செய்தியாளர், திருவேங்கடம் செல்ஃபோன் எண்ணுக்கு அழைத்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. குற்றச்சாட்டு தொடர்பாக அவர் தரப்பில் விளக்கம் அளித்தால் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.

இதையும் படிங்க: வேலூர் அருகே ஒரே கிராமத்தில் 3000 ராணுவ வீரர்கள்.. கம்மவான்பேட்டை ராணுவப்பேட்டையாக மாறிய ரகசியம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.