ETV Bharat / state

ஒன்றரை கோடி கொள்ளை என நாடகம்.. கோவையில் சிக்கிய பாஜக பிரமுகர்.. காவல்துறை அளித்த பகீர் தகவல்! - BJP executive false complaint - BJP EXECUTIVE FALSE COMPLAINT

Annur BJP executive false complaint: கோவையில் ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக நிர்வாகி விஜயகுமார் புகைப்படம்
பாஜக நிர்வாகி விஜயகுமார் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 7:30 PM IST

கோவை எஸ்பி பத்ரிநாராயணன் செய்தியாளர் சந்திப்பு (credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: அன்னூர் அருகே பாஜக நிர்வாகி விஜயகுமார் வீட்டில் ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவத்தில், திருட்டுப்போனது ரூ.18.5 லட்சம் என விசாரணையில் தெரியவந்ததால், பொய் புகார் அளித்ததாக பாஜக நிர்வாகி மீது அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த சொக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக பிரமுகரான இவர், இதே பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது வீட்டில் வைத்திருந்த ரூ.1.5 கோடி பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதாக நேற்று முன்தினம் அன்னூர் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார், மேட்டுப்பாளையம் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில், 10 தனிப்படைகள் அமைத்து வீட்டில் பதிவாகியுள்ள கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் விஜயகுமாரின் வீட்டுக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்து சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார் அன்னூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன். இவர், கருமத்தம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடம் இருந்து ரூ.18.5 லட்சம் ரொக்கம் மற்றும் 9 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் அவர் மீது 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 1.5 கோடி கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதன் உரிமையாளரான பாஜக நிர்வாகி விஜயகுமார் அழைத்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், கொள்ளை போனது 18 லட்சம் மற்றும் 9 சவரன் நகை மட்டுமே என்பதை விஜயகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். கொள்ளையர்களை விரைவாக பிடிப்பதற்காக போலீசுக்கு அழுத்தம் தரவே ஒன்றரை கோடி ரூபாய் காணாமல் போனதாக பொய் புகார் அளித்ததாக விஜயகுமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, கொள்ளை போனது தொடர்பாக பொய் புகார் அளித்த பாஜக நிர்வாகி விஜயகுமார் மீது அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில். கொள்ளை அடித்தவர் 24 மணி நேரத்துக்குள்ளாக பிடிபட்ட நிலையில், அன்னூர் காவல் நிலையத்துக்கு நேரில் வந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “கொள்ளை சம்பவங்களில் உண்மையான தகவலை கூறினால் மட்டுமே போலீசார் விசாரணையை துரிதப்படுத்த முடியும். தவறான தகவல்களை கூறினால் அது விசாரணையை பாதிக்கும். பொதுமக்கள் இது போன்ற குற்ற வழக்குகளில் பொய்யான தகவல்களை கொடுக்க வேண்டாம். இந்த கொள்ளை சம்பவத்தில் பொய்யான தகவல்களை கூறி போலீசாரை அலைக்கழித்த பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் கோர விபத்து: பைகா பழங்குடியின பெண்கள் 17 பேர் பலி! - Kawardha Accident Update

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.