ETV Bharat / state

துணை முதலமைச்சர் விவகாரம்; தந்தையே மகனை ட்ரோல் செய்தால் நாங்கள் என்ன செய்வது? - அண்ணாமலை கருத்து - annamalai about deputy cm issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 10:42 PM IST

Updated : Aug 10, 2024, 10:59 PM IST

Annamalai: துணை முதலமைச்சர் விவகாரத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது ஆனால் பழுக்கவில்லை என தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட உதயநிதிக்கு அவமானம் தேவையில்லை. தந்தையே மகனை ட்ரோல் செய்தால் நாங்கள் என்ன செய்வது என தமிழக பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை (Credits - Annamalai X Page and ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: ஈரோட்டில் வருங்கால தலைமுறையினர் தொழில் முனைவோர் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அண்ணாமலை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. இதனை ஜிஎஸ்டி குறியீடு வைத்து எந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கணிக்க முடியும். 2024ம் ஆண்டு காலாண்டு பகுதியில் மஹாஷ்டிரா 15%, கர்நாடகா 9% ஆகிய மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாடு 3.3% மட்டுமே உள்ளது.

திமுக அரசு இதனை கவனிக்க வேண்டும். தமிழ்நாடு ஜிஎஸ்டி மாநில வருவாய் மைனஸ் பாயிண்ட் அடிப்படையில் கீழே சென்று உள்ளது. அப்படி என்றால் தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மேலும், தொழில் முனைவோருக்கு போதுமான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தரவேண்டும்.

மத்திய பிரதேச முதலமைச்சர் வந்த போது நான் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. கோவையில் தனியார் ஹோட்டலில் தொழில் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொழில் முனைவோர் எங்கே சலுகை கிடைக்கிறதோ அங்கு செல்வார்கள். நாம் மற்ற மாநிலத்தை பார்த்து பிரம்மிப்பு அடையும் வகையில் தான் தமிழகத்தின் நிலை உள்ளது. தமிழகத்தில் இருந்து மற்ற தொழில் முனைவோர் வேறு மாநிலத்திற்கு செல்லாத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில் முனைவோர் முதலமைச்சரை நேரடியாக பார்க்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வங்காள தேசத்தில் உள்ள பிரச்னையை பயன்படுத்தி தொழில் முனைவோரை தமிழகம் நோக்கி அழைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தல்: தமிழக பாஜக வரும் 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்காக திருப்பூரில் நாளை முதல் கூட்டம் தொடங்க உள்ளது. திமுகவில் 40ஆண்டுகளுக்கு தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர் போன்று பாஜகவில் இல்லை. பாஜக கட்சி தலைவர் இல்லாத போதும் மற்றவர்கள் தலைவர்கள் கட்சி பணிகளை கவனிப்பார்கள். பாஜகவின் தற்போதைய கூட்டணி ஆட்சியை முன்வைத்ததால் தான் கூட்டணி அமைத்தோம்.

தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி என பேச்சு எழுந்துள்ளது. கூட்டணிக்குள் யார் வந்தாலும் கூட்டணி ஆட்சி தான் என்பதில் சந்தேகம் இல்லை. 2026ம் ஆண்டு நான்குமுனை போட்டி இருக்கும் எவ்வளவு போட்டி இருக்கிறதோ அப்போது தான் புதியவர்கள் வெற்றி பெற முடியும்.

நல்லவர்களும் 2026ம் ஆண்டு தேர்தலில் வரும்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன். அப்போது தான் மக்கள் யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்ற வாய்ப்பாக இருக்கும். தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, ராதாகிருஷ்ணன் என யாராக இருந்தாலும் 5 வருடத்திற்கு ஒரு முறை வாக்கு சதவிகிதம் உயரவில்லை என்றால் கட்சி எங்காவது தவறு செய்கிறது என்று தான் அர்த்தம். அதனால் பாஜக வளர்ந்து இருக்கிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி இன்னும் வளரவில்லை. திமுக, அதிமுக கட்சிகள் அண்ணாமலையை தவிர பாஜகவில் உள்ள மற்ற தலைவர்களை புகழ்ந்து பேசுகிறார்கள். இதனால் என் மூலம் நான் பழைய தலைவர்களுக்கு நல்ல பெயர் பெற்று கொடுத்து உள்ளேன்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் காலதாமாகி வருகிறது. எத்தனை முறை காலதாமதம் செய்வது, அமைச்சர் தேதி அறிவிக்காத நிலையில் அவர் பேச்சை எப்படி நம்புவது?, அமைச்சர் முத்துசாமி திட்டம் தொடங்குவதற்கு முதலமைச்சரிடம் தேதி வாங்கிவிட்டாரா? தேதி அறிவித்தால் நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறோம்.

மொடக்குறிச்சியில் கேந்திராலாயா பள்ளி கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏன் அனுமதி கொடுக்கவில்லை? மத்திய அரசு கொடுப்பதற்கு தயாராக இருந்தும், தமிழகத்தில் பள்ளி கட்டடம் சரியில்லாத காரணத்தினால் நவோதயா, கேந்திரா போன்ற பள்ளிக்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை?

அதே நேரத்தில் காமராஜர் பெயரில் கூட மத்திய அரசு தமிழகத்தில் பள்ளி திட்டம் கொண்டு வர தயார். ஆனால் தமிழக அரசு அனுமதி கொடுக்குமா? துணை முதலமைச்சர் விவகாரத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது பழுக்கவில்லை என தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட உதயநிதிக்கு அவமானம் தேவையில்லை தந்தை ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்தால் நாங்கள் என்ன செய்வது?

வினேஷ் போகத் எடை அதிகரிப்பு காரணத்திற்கு மோடி தான் காரணம் என திமுக போஸ்டர் ஒட்டுகிறது. இதை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. தமிழகத்தில் அரசியல் தரம் தாழ்ந்து நடக்கிறது. அறிவுப்பூர்வமான அரசியல் நடந்தால் தமிழகம் முன்னேற்றம் அடையும்.

பால் கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் மீது பல வருடத்திற்கு முன்பு புகார் கொடுத்து இருந்தார். பால் கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் உறவு குறித்து விளக்கம் அளித்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பால் கனகராஜ் விசாரணைக்கு அழைத்தது சரி தான், தவறு தான் என காவல்துறை அனைத்து வகையிலும் விசாரணை செய்வது வழக்கம் தான். கார் பந்தயம் நடத்துவதில் எங்களுக்கு பிரச்னை இல்லை. கார் பந்தய சாலைக்கு ரூ.40 கோடி நிதியை பள்ளி போன்றவற்றிக்கு பயன்படுத்தி இருக்கலாம்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆக.19-க்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு! - udhayanidhi stalin deputy cm

Last Updated : Aug 10, 2024, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.