ETV Bharat / state

பாஜகவில் 124 ரவுடிகளா? போட்டா போட்டியாக பட்டியல் வெளியிடும் செல்வப்பெருந்தகை - அண்ணாமலை! - Selvaperunthagai Vs Annamalai - SELVAPERUNTHAGAI VS ANNAMALAI

Selvaperunthagai slams Annamalai: தமிழக பாஜகவில் 124 ரவுடிகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் பட்டியல் அணி மாநிலச் செயலாளர் நெடுங்குன்றம் சூர்யா மீது 63 வழக்குகள் இருப்பதாக கூறினார்.

செல்வப்பெருந்தகை, பாஜக நிர்வாகி சூர்யா, அண்ணாமலை (கோப்புப்படம்)
செல்வப்பெருந்தகை, பாஜக நிர்வாகி சூர்யா, அண்ணாமலை (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 7:18 PM IST

சென்னை: சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இது என்ன நாகரீகம்?: அப்போது பேசிய அவர், '' சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற உயிரிழப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்தநாளை கன்னியாகுமரியில் காங்கிரஸ் இயக்கம் கொண்டாட உள்ளது. அண்ணாமலை துக்கம் விசாரிக்கும் இடத்தில் அரசியல் பேசலாமா? சாவு வீட்டிற்குச் சென்று பாஜக அரசியல் பேசுகிறார். பத்திரிகையாளர்களை முறைக்கிறார். இது என்ன நாகரீகம்? என சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்குச் சென்று வந்த பின்னர் அண்ணாமலை பேசியதை விமர்சித்து செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை? தொடர்ந்து பேசிய அவர், ''எஸ்.வி.சேகர், காயத்ரி ரகுராம், திருச்சி சிவா, தமிழிசை சௌந்தரராஜன், நிர்மல் குமார் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் ஏன் அண்ணாமலை மௌனமாக இருக்கிறார்? சொந்த கட்சிக்காரர்களையே வார் ரூம் மூலமாக கண்காணிப்பது, அவருக்கு மேல் வளர்கிறவர்களை மட்டம் தட்டுவது, துரோகம் செய்வது போன்ற ஹனிட்ராப் குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை?'' என்றார்.

மேலும், ''ஆருத்ரா தொடர்பாக நாங்கள் பேசியதும் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. என்னை ரவுடி என கூறுகிறார். ஒரு தலித் மீது அவதூறு பேசினால் என்ன நடக்கும் என தெரியும். பல தலித் தலைவர்கள் என்னை அழைத்து தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் கொடுக்கப் போகிறோம்'' என கூறுகின்றனர்.

அரசியல் நாகரீகம் கருதி நான் வேண்டாம் என்று கூறியிருக்கிறேன். நாங்கள் இதற்கு புகார் கொடுத்தால், நீங்கள் சிறைக்குச் செல்வதை தவிர்க்க முடியுமா? அண்ணாமலை உத்தமபுத்திரன் என்றால் ஆங்கில பத்திரிகையில் வந்த கட்டுரையைக் காட்டி, என் மீது மான நஷ்ட வழக்கு போட முடியுமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பாஜகவில் 124 ரவுடிகள்?: அதனைத் தொடர்ந்து, ''அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்து தேர்ச்சி பெற்றார்? எல்லா குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்து விட்டு சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறார். என்னை ரவுடி என்று சொல்கிறாயே, எங்கேயாவது, ஒரு இடத்திலாவது வழக்கிலாவது என்னை குற்றவாளி என நிரூபிக்க முடியுமா? எனக்கூறி, தமிழ்நாடு பாஜகவில் 124 ரவுடிகளின் பட்டியலை காட்டி, அவர்கள் மீது 834 வழக்குகள் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, செல்வப்பெருந்தகை வெளியிட்ட ரவுடிகளின் பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் பாஜக பட்டியல் அணி மாநிலச் செயலாளர் சூர்யா என்ற நெடுங்குன்றம் சூர்யா என்றும் அவர் மீது 63 வழக்குகள் இருப்பதாகவும்'' குறிப்பிட்டார்.

அண்ணாமலை நிலைமை என்ன ஆகும்?: மேலும், ''அண்ணாமலை கர்நாடகாவில் ஏன் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் என ஆய்வு செய்ய வேண்டும். காவல்துறை, தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நான் புகார் கொடுத்தால் அண்ணாமலை நிலைமை என்ன ஆகும்? நாங்கள் தொடர்ந்து மன்னித்து வருகிறோம். ஆனால், மக்கள் உங்களை மன்னிப்பதற்கு வாய்ப்பே கிடையாது. துக்க வீட்டில் என்ன பேச வேண்டும், திருமண வீட்டில் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

இதுதான் கடைசி எச்சரிக்கை: இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பற்றி பேசி அரைவேக்காடாக அரசியல் பண்ணும் அண்ணாமலை, இவர்கள் குறித்து வாஜ்பாய் என்ன சொன்னார் என படிக்க வேண்டும். வாஜ்பாயே மதிக்காதவர்கள் அவரை தலைவராகவே ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஆர்எஸ்எஸ் சங்கிகள் பேசுவதை கேட்டுக்கொண்டு வாய்க்கு வந்ததை உளருகிறார். அண்ணாமலைக்கு இதுதான் கடைசி எச்சரிக்கை.. இது அவருக்கு நல்லதில்லை.. நான் கமலாலயம் வருவதற்கு தயாராக இருக்கிறேன். உங்களை மாதிரி கோழைகள் அல்ல. நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்கள். 2004 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பு உள்ளது..

இந்த தீர்ப்பை படித்து இருந்தால் அண்ணாமலை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள் மண்டியிட்டதோ, மன்னிப்பு கேட்டதா இல்லை. இதுதான் எங்கள் பரம்பரை. இதுதான் காங்கிரஸ் வரலாறு என்ற கூறிய செல்வப்பெருந்தகை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்'' என்று கூறினார்.

இந்த நிலையில், “மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக செல்வப்பெருந்தகை மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை” என தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, செல்வப்பெருந்தகை மீதுள்ள வழக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம்; அதிகாரிகளுடன் முதலைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.