சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி (MIT) கல்லூரியின் 75ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்ஐடி கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகத்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்றாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எம்ஐடி கல்லூரி செய்திருக்கின்ற சாதனைகள் அதிகமானது. பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த பங்களிப்பை எம்ஐடி கல்லூரி அளித்துள்ளது. இன்று எம்ஐடி நிறுவனர் தினத்தை முன்னிட்டு பிரத்யேக ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு நாட்கள் எம்ஐடி முன்னாள் மாணவர்கள் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இறுதி நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 4 முக்கிய கேம்பஸ்களில் எம்ஐடி கல்லூரி முக்கியமானது. அண்ணா பல்கலைக்கழகம் உலக அரங்கில் 850 ரேங்கிலிருந்து 383 ரேங்கிற்கு வந்துள்ளது.
இந்தியாவில் ஏழு ஐஐடிகள், டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அடுத்து பத்தாவது ரேங்கில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் நான்கு வருடத்தில் 50வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த நேரத்தில் உலக அளவில் 200 ரேங்கிற்குள் வருவதற்கு எம்ஐடி கல்லூரி உட்பட அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நான்கு கேம்பஸ்களில் இருக்கும் கல்லூரிகளும் உலக அரங்கில் கொண்டு வர பாடுபடுவோம்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் மழைநீர் வடிகால்வாய் முகத்துவாரத்தை சீர்செய்யும் பணிகளின் நிலை என்ன? - மேயர் பிரியா தகவல்! - Canal Mouth Repair Works In Chennai