சென்னை: இந்திய நாட்டின் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கம் வழங்கி வீர, தீரச் செயல்களிலில் ஈடுபடுபவர்களை தமிழக முதலமைச்சர் பாராட்டி வருகிறார்.
அதேபோல் அடுத்த ஆண்டின் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்திற்காக வீர, தீரச் செயல் புரிந்தவர்களின் விண்ணப்பங்கள் அரசு பெற துவங்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர்.
2025-ஆம் ஆண்டிற்கான 'வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்' விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/wv2BBFnGZb
— TN DIPR (@TNDIPRNEWS) October 24, 2024
இதையும் படிங்க: பிரான்ஸ் புறப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
- பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) இப்பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. இவ்விருது ரூ.1,00,00ஒரு லட்சத்திற்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கத்தை முதலமைச்சர் 26.01.2025 குடியரசு தினத்தன்று வழங்குவார்.
- இந்த வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை அதற்கென உள்ள படிவத்தில் உள்ளடக்கியதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- இந்த விருதுக்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 2024 டிசம்பர் 15ஆம் தேதி ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யபடுவார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்