ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்; உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கத் தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை! - ban on online gambling

Anbumani Ramadoss Statement: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்தும் தற்கொலைகள் தொடர்வதால், தமிழ்நாடு அரசு, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 6:28 PM IST

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதா 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டது, அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்தது செல்லும் என்று உத்தரவிட்டது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி கடன் வாங்கி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்தும் தற்கொலைகள் தொடர்வதால், தமிழ்நாடு அரசு, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஓடும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்குப் பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்குப் பலியாகியுள்ள ஐந்தாவது உயிர் ஜெயராமன் ஆவார்.

ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்து உயிர்கள் பலியாகி வரும் நிலையில், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்குக் கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: சிறப்பு வகுப்பை தவறவிட்ட சிறுமியிடம் மன்னிப்பு கேட்ட நீதிபதி - சென்னை உயர்நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்! - MHC Judge Karthikeyan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.