ETV Bharat / state

பாரத சாரணர் இயக்குநரக வைர விழாவை திருச்சியில் நடத்த முடிவு.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்! - Anbil Mahesh Poyyamozhi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 7:01 PM IST

Anbil Mahesh Poyyamozhi: பாரத சாரணர் இயக்குநரக வைர விழாவை ரூ.10 கோடி மதிப்பில் திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி சாரண சாரணியர் மாநில ஆனையரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருமான அறிவொளி பேசியதாவது, “இந்த பொதுக்குழு கூட்டம் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்த பிறகு எமிஸ் (EMIS) வலைத்தளத்தில் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஜாம்புரி என்ற சாரண சாரணியர் இயக்க வைர விழா நடைபெற உள்ளது. இவ்வாறு நடைபெற உள்ள வைர விழா, ஜாம்புரி நிகழ்ச்சி வைர விழா நிகழ்வாக மட்டுமின்றி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவாகவும் நடக்கும். மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா பகுதியில் வைர விழா ஜாம்புரி நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கு நூற்றாண்டு விழா சிறப்பு ஜாம்புரியாக பெயர் வைக்க மத்தியில் அனுமதி கிடைத்துவிட்டது. சர்வதேச ஜாம்புரி நிகழ்வாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ பாரத சாரணர் இயக்கத்தின் வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்ட ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. தற்கட்டமாக 38 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கான பதிலைப் பொறுத்து விழாவை தேசிய அல்லது சர்வதேச அளவில் நடத்துவது குறித்து முடிவு செய்வோம்.

சாரணர் இயக்குநரகத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 12 லட்சம் என்ற இலக்கை எட்ட வேண்டும். எதிர்காலத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனரே சாரணர் இயக்குநரகத்தின் மாநில ஆணையராகவும் இருப்பார். அதுதொடர்பான விதிமுறைகள் மாற்றம் செய்யப்படும்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைரவிழாவை திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.10 கோடி செலவில் திட்டமிடப்படும் வைரவிழாவை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் நடத்த அனுமதி பெற்றுள்ளோம். எந்த தேதி என்பதை முதல்மைச்சருடன் ஆலோசித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

குறைந்தது 5 நாட்கள் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு முன்னதாக கர்நாடகாவில் சர்வதேச அளவிலும், ராஜஸ்தானில் தேசிய அளவிலும் பாரத சாரணர் இயக்குநரக நிகழ்வை நடத்தியுள்ளனர். அதைவிட பிரம்மாண்டமாக நடத்த உள்ளோம். மாணவர்களுக்கான ஒழுக்கம் தொடர்பான கல்வி இத்தகைய இயக்கங்கள் வாயிலாகவே கிடைக்கும்’” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோவை வழக்கறிஞர் படுகொலைக்கு இதுதான் காரணமா?.. எஸ்பி அதிரடி தகவல்! - Coimbatore Lawyer Murder

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.