ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் யாருக்கு செல்லும்? - dmk vs pmk in vikravandi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 9:38 PM IST

admk vote split: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பதால் திமுக - பாமக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவ உள்ள நிலையில், அதிமுகவின் வாக்குகள் எந்த கட்சிக்கு செல்லும் என்பதான ஓர் அலசல்.

மு.க.ஸ்டாலின் மற்றும் ராமதாஸ்
மு.க.ஸ்டாலின் மற்றும் ராமதாஸ் (Image Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி காலமானார். இதனால் அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் தேதி அறிவித்த உடனேயே திமுக சார்பில் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி மருத்துவர் அபிநயாவை வேட்பாளராக அறிவித்தது.

நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் 2ம் இடம், 3 ஆம் இடம் என பிடித்த பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் காலமான புகழேந்தியும், அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும் போட்டியிட்டனர். அந்த தேர்தல் முடிவில் திமுக 93730 வாக்குகளும், அதிமுக 84157 வாக்குகளும் பெற்றன. இறுதியில், 9573 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. வாக்கு சதவீதத்தின்படி, திமுகவுக்கு 48.41%, அதிமுகவுக்கு 43.47% சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதிமுக 4.94 % வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்துள்ளது.

மேலும், தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குள்ளாக வரும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வி.சி.க 72,188 வாக்குகளையும், அ.தி.மு.க 65,825 வாக்குகளையும், பா.ம.க 32,198 வாக்குகளையும் பெற்றது.

இந்நிலையில், விக்கிரவாண்டியில் மிகப்பெரிய வாக்கு சதவீதத்தை வைத்துள்ள அதிமுக, திமுகவிற்கு மிகக் கடுமையான போட்டியாக இருக்கும் என பார்க்கப்பட்டது. இடைத்தேர்தலில், பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் '' திமுக அரசு வெற்றிக்காக ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அராஜகங்களிலும், வன்முறைகளில் ஈடுபடும்'' என குற்றம்சாட்டி தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைப்பெறாது என கூறி விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் கூறுகையில், '' பாஜக கூட்டணியில் உள்ள பாமக-வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கும் என்றும் இது மேலிடத்தில் இருந்து உத்தரவு என்பதற்கான சான்று'' எனவும் கூறினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ''பாஜக-பாமக வை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும் என்பதற்காக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இரு கட்சிகளின் 'B' டீம் ஆக அதிமுக செயல்படுகிறது'' என்றார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியபோது, ''அதிமுக மறைமுகமாக பாஜகவுடன் ஒப்பந்தம் வைக்க நினைப்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்த நிலையில் இந்த இடைத்தேர்தலிலும் டெபாசிட் இழந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலாகி விடும் என அவர் அஞ்சுகிறார்'' எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், மூன்று முனைப்போட்டியாக மாறியுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது யாருக்கு சாதகமாகும், அதிமுகவின் வாக்கு எந்த கட்சிக்கு செல்லும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் ஷபீரிடம் ஈடிவி பாரத் முன்வைத்தது.

இதற்கு பதில் அளித்த அவர், '' அதிமுக தேர்தலை சந்தித்து இருக்கலாம். ஆனால், தொடர் தோல்வியின் காரணமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட சி.வி. சண்முகம் விரும்பியதாகவும், எஸ்.பி வேலுமணி போன்றோர் பங்கேற்க வேண்டாம் என கூறியதாகவும் அதிமுக வட்டார தகவல் தெரிவிக்கின்றன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பங்கேற்று 4 முனை போட்டியாக மாறியிருந்தால், திமுக மிக எளிதாக வெற்றிப் பெற்றிருக்கும்,'' என்றார்.

மேலும், ''மும்முனை போட்டியாக மாறியதால் திமுகவுடன் நேரடியாக பாமக மோதுகிறது. இதனால், திமுக எதிர்ப்பு வாக்குகள் பெரும்பாலும் பாமகவிற்கு சென்று திமுகவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். அதேசமயம், திமுக இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற முழு பலத்தையும் செலுத்தும்,'' என்றார் ஷபீர்.

அத்துடன் ''தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இருப்பதால் அதை விரும்பாத அதிமுக வாக்குகள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கு செல்லும். இரட்டை இலை சின்னம் தவிர எதற்கும் வாக்களிக்க மாட்டேன் என கூறும் அதிமுக சாதகமான வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களிக்கவும் அல்லது தேர்தலையும் புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பாமகவை அழைக்கும் சமிக்ஞையாக கூட இந்த தேர்தல் புறக்கணிப்பு இருக்கலாம்'' என ஷபீர் கூறினார்.

இதையும் படிங்க: மதம் பிடித்தவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்றியது திமுக - நீலகிரி எம்பி ஆ.ராசா பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.