ETV Bharat / state

கும்பகோணத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டி..உற்சாகமாக பங்கேற்ற இளம்பெண்கள்! - International Youth Day - INTERNATIONAL YOUTH DAY

Women Marathon In Kumbakonam: சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் 1500க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கலந்துகொண்ட 8 கி.மீ நீள பெண்கள் மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இளம்பெண்கள்
மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இளம்பெண்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 6:23 PM IST

தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் நாள் சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இளையோர் எழுச்சி தினத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் இன்று (ஆக.11) கும்பகோணத்தில் 1500க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஆர்வமாக பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இளம்பெண்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சர்வதேச இளைஞர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கும்பகோணம் தாராசுரம் பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் இளைஞர் எழுச்சி நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, அங்கிருந்து புறப்பட்ட 1500க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பங்கேற்ற இந்த 8 கி.மீ நீள மாரத்தான் ஓட்டத்தினை, கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் கல்லூரி செயலாளர் அமலோர்பவ மேரி, கல்லூரி முதல்வர் யூஜின் அமலா தஞ்சை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலையில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் தாராசுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தாராசுரம் காய்கறி சந்தை, தாலுக்கா காவல் நிலையம், மொட்டை கோபுரம், உச்சிப்பிள்ளையார் கோயில், ஆயிக்குளம் சாலை, ஹாஜியார் தெரு, நால்ரோடு, ரயில் நிலைய சாலை, மேம்பாலம் வழியாக 8 கி.மீ தூரத்தைக் கடந்து இதயா மகளிர் கல்லூரி வளாகத்தை சென்றடைந்து நிறைவு பெற்றது.

இதில் முதலிடம் பெறும் வெற்றியாளருக்கு ரூபாய் 10 ஆயிரம், 2ம் இடம் பெறுபவருக்கு ரூபாய் 5 ஆயிரம், 3ம் இடம் பெறுபவருக்கு ரூபாய் 3 ஆயிரம், 4ம் இடம் பெறுபவருக்கு ரூபாய் 2 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக அடுத்து வரும் முதல் 5 நபர்களுக்கு தலா ரூபாய் ஆயிரமும் வீதம் மொத்தமாக பரிசுத் தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், மாரத்தான் ஓட்டத்தில் முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆஃபியாவும்; 2ஆம் பரிசு ரூ.5 ஆயிரத்தை மயிலாடுதுறையைச் சேர்ந்த சரஸ்வதியும்; 3ஆம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மயிலாடுதுறையைச் சேர்ந்த திவ்யதர்ஷினியும்; 4ஆம் பரிசு ரூ.2 ஆயிரத்தை விஷ்ணுபுரம் அர்ச்சனாவும் பெற்றனர்.

இதுமட்டும் அல்லாது, ஆறுதல் பரிசாக 4ஆம் பரிசு பெற்றவரை அடுத்து வந்த முதல் 5 நபர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. இப்படியாக இந்த மாரத்தான் போட்டியில் மொத்தம் ரூ.25 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பெண்களுக்கான விடுதலை வாக்கத்தான்.. மதுரையில் களைக்கட்டிய 78ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.