ETV Bharat / state

விக்கிரவாண்டியில் குடிநீர் கிணற்றில் மலம்? ஆய்வில் கிடைத்த அந்தப் பொருள் என்ன? கலெக்டர் எடுத்த அதிரடி முடிவு..! - Human feces in Well in Vikravandi - HUMAN FECES IN WELL IN VIKRAVANDI

Human Feces Issue in Vikravandi: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கிணற்றில் மலம் கலந்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து விக்கிரவாண்டி கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் செய்த ஆய்வில், கிணற்றில் கிடந்தது மலமில்லை எனவும்; அவை தேன் அடை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Vikravandi well image
Vikravandi well image (Photo Credits to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 11:41 AM IST

விழுப்புரம்: அடுத்த விக்கிரவாண்டியில் திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், கிணற்றில் ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரைத்தான் கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விநியோகிப்படுவதாகவும் அப்பகுதி கிராம மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்று ஒரு சம்பவமா என பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சம்பவம் குறித்துத் தகவலறிந்த கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே அமைந்துள்ள கஞ்சனூர் பகுதியில் பொது குடிநீர் கிணற்றில் மலம் கலப்பு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Related Images of Human Feces Issue in Vikravandi
விக்கிரவாண்டியில் மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட கிணற்றின் புகைப்படம் - கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 'தேன் அடை' (Credits: ETV Bharat Tamil Nadu)

கிணற்றுக்குள் 'தேன் அடை': தற்போது இந்த ஆய்வின் முடிவில், கிணற்றில் கிடந்தது மலமில்லை எனவும், 'தேன் அடை' எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனூர் மதுரா கே.ஆர்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் மலம் கலப்பு என சில தனியார் தொலைக்காட்சிகளில் இன்று வரப்பெற்ற செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும்.

மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர், காணை வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியோர் அடங்கிய குழு சம்மந்தப்பட்ட இடத்தினை பார்வையிடப்பட்டது.

கிணற்றிற்கு கம்பி வேலி: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் மேற்படி கிணற்றில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலம் என செய்திகளில் வரப்பெற்ற பொருளானது 'தேன் அடை' ஆகும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் முன்னிலையில் எடுத்துக்காட்டப்பட்டது. இருப்பினும், மேற்படி கிணற்றின் மீது இரும்பு கம்பிகளால் வேலி அமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு: சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் ரகசிய விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.