ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்.. அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து! - RAMZAN CELEBRATION in TN

Ramzan Celebration: இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Ramzan Celebration
Ramzan Celebration
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 9:47 AM IST

Updated : Apr 11, 2024, 11:59 AM IST

திருச்சி: இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு, பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், தொண்டையில் எச்சில் கூட விழுங்காமலும் மிகக் கடுமையான நோன்பு இருந்து ரமலானைக் கொண்டாடுவர்.

பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கம், ஏழை மக்களுக்கு தர்மம் வழங்கி கடைபிடிப்பதாக உள்ள பெருநாளான ரமலான் பண்டிகை, இன்று (ஏப்.11) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு, திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கூட்டுத்தொழுகை நடைபெற்றது. இதன் காரணமாக தொழுகை நடைபெறும் இடங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முன்னதாக, ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டி.டி.வி. தினகரன், நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ரம்ஜான் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: “ஊழல் செய்தவர்கள் பாஜகவில் சேர்ந்தால் உத்தமர்கள்” - ஊழல் குறித்த பிரதமரின் பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 11, 2024, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.