ETV Bharat / state

“விஜயின் அரசியலுக்கு திமுக பல நெருக்கடிகள் கொடுக்கிறது” - முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்! - AIADMK JAYAKUMAR ABOUT TVK FLAG - AIADMK JAYAKUMAR ABOUT TVK FLAG

Jayakumar about DMK on Vijay Politics: விஜய் கட்சி ஆரம்பித்ததால் திமுக அரசியலுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில் தான் திமுக, விஜய்க்கு பல்வேறு நெருக்கடிகளை தருகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 5:41 PM IST

Updated : Aug 21, 2024, 5:56 PM IST

சென்னை: அதிமுகவின் புதிய உறுப்பினர் அட்டைகளை ராயபுரம் மற்றும் திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “திமுக அமைச்சர்களும் திமுக நிர்வாகிகளும், போதைப் பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி இருப்பதால் மத்திய அரசுக்கு சொம்பு தூக்கும் கட்சியாக மாறிவிட்டது. திமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து திமுக ஃபைல்ஸ் என ஆளுநரைச் சந்தித்து அண்ணாமலை கொடுத்தார். அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநரைச் சந்தித்து அண்ணாமலை வலியுறுத்தினாரா?

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜகவை அழைத்து உள்ளதைப் பார்க்கும் பொழுது ஸ்டாலினின் தலைவராக மோடி மாறியுள்ளாரோ என தோன்றுகிறது. இதற்கு முன் இதுபோல் பாஜகவை அழைத்து, விளம்பரம் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தினாரா? தமிழகத்தில் மின் கட்டண உயர்வு முதல் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் விற்பனை கடுமையாக உயர்ந்து உள்ளதால் ஒட்டுமொத்த தொழில்துறையும் தமிழகத்தில் முடங்கிப் போய் உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டில் இருந்து எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, எத்தனை ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர் என்பது குறித்து முதலைமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 65 லட்சம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி அளித்தனர், அது என்ன ஆயிற்று?

திமுக அரசு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் 1,500 தனியார் பாருக்கு அனுமதி அளித்தது. தமிழகத்தில் பல இடங்களில் வக்ஃபு வாரிய சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கைமாற்றப்பட்டுள்ளது. இதற்கும் செஞ்சி மஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

நாங்க போட்ட பிச்சை எனக் கூறுவது சரியாக இருக்காது, எங்களால் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்ற பாஜக எங்களைப் பார்த்து பேசுவது வினோதமாக உள்ளது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியாவது பெற்று காட்ட வேண்டும்.

விஜய் கொடி ஏற்றுவதால் திமுகவிற்கு பயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எவ்வளவு தடங்கல் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கின்றனர். விஜய் கட்சி ஆரம்பித்ததால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என நினைத்து திமுக விஜய்க்கு பல்வேறு நெருக்கடிகள் தருகிறது. ஜனநாயக நாட்டில் கொடி ஏற்றுவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. அப்படி அவருக்கு அனுமதி கொடுத்துவிட்டு சென்றிருக்கலாமே ஏன் சர்ச்சையாக்குகிறார்கள்?

தமிழகத்தில் அம்மா மருந்தகம் என்ற எதுவும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறை மூலம் தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகம் தொடங்கி செயல்பட்டது. உலகத்துக்கே தெரிந்த திட்டம் ஆனால் அமைச்சருக்கு மட்டும் தெரியவில்லை. அவருக்கு வாரத்துக்கு இரண்டு சினிமா, முதலமைச்சர் ரோடு நடைபயணம், மாரத்தான் ஓடுவதை தவிர வேறு ஒன்றும் தெரிய வாய்ப்பு இல்லை” எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தணிக்கை செய்யப்பட்டது 'கோட்'... விஜய் படங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் U/A சான்றிதழ்!

Last Updated : Aug 21, 2024, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.