தருமபுரி: 18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து, பென்னாகரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மருத்துவர் அசோகன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், வேட்பாளர் அசோகனை ஆதரித்து, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பிளியனூர், அஞ்சேஹள்ளி, மாங்கரை, பருவதனஹள்ளி, வட்டுவனஹள்ளி, பென்னாகரம் பேரூராட்சி உள்ளிட்ட 19 ஊராட்சிகளில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தருமபுரி அதிமுக வேட்பாளர் அசோகனுக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். இந்த பிரச்சாரத்தில், அதிமுக விவசாயப் பிரிவு மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன், அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி போட்டியிடுகிறார். அதேபோல், பாமக சார்பில் செளமியா அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான்கு முனைப் போட்டியில் மோதும் 4 பெண்கள்.. விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - Vilavancode By Election 2024