ETV Bharat / state

"மதுரையில் அதிமுக தோல்வி.. மன உளைச்சலாக உள்ளது" - செல்லூர் ராஜூ பேச்சு! - ex minister sellur raju - EX MINISTER SELLUR RAJU

Sellur K.Raju: குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள பிரதமர் மோடிக்கு வாக்களித்தனர். சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். இதில் அதிமுக அடிபட்டுவிட்டது. மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது, தற்போது தோல்வியைத் தழுவியுள்ளது. இது எங்களுக்கு மன உளைச்சல் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 4:31 PM IST

மதுரை: முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122-வது பிறந்தநாளை ஒட்டி, மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில், அதிமுக சார்பில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து செல்லூர் ராஜூ பேசியதாவது, பெருந்தலைவர் ஆட்சியை கொடுக்கும் ஆட்சி திமுக என்று கூறுவது குறித்து கேடகப்பட்ட கேள்விக்கு, “ சட்டஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் மரணம், கொலை, கொள்ளை என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதில் எப்படி திமுகவினர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைக் கொடுக்க முடியும்?

சட்டம் ஒழுங்கு இவ்வளவு சீர்கெட்டு இருக்கும்பொழுது, சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து கொண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுகவை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியைக் கொடுக்க முடியாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர். சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். இதில் அதிமுகவினர் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியைத் தழுவினோம், பல இடங்களில் இரண்டாவது இடம் பெற்றோம். இது குறித்தும், ஆடியோ குறித்தும் பொதுச் செயலாளர் எதுவும் கூறவில்லை. மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால், தோல்வியைத் தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குச் சென்ற திருவேங்கடத்திற்கு கை விலங்கு போடவில்லை. தப்பி ஓடினார் என்பதற்காக என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார் என காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள். இது போன்ற களங்கம் ஸ்டாலின் ஆட்சியில்தான் ஏற்படும். கள்ளச்சாராயம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: “நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” - அண்ணாமலை வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.