தருமபுரி: அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் காரிமங்கலம் கெரகோடஹள்ளி பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இவரது இளைய மகன் சசி மோகனின் மனைவி பூர்ணிமா (30) சென்ற வாரம் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் மயங்கி விழுந்தபோது எதிர்பாராதவிதமாக விளக்கில் இருந்த தீ பற்றி பூர்ணிமாவின் உடலில் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீக்காயம் ஏற்பட்ட பூர்ணிமா ஆபத்தான நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.