ETV Bharat / state

வரதட்சணை புகாருக்கு மறுப்பு தெரிவித்த கே.பி.கே.சதீஷ்குமார்.. சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனைவி மீது புகார்.. - Sruthi Priyadarshini

KPK Sathish kumar Dowry Case: எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தனின் மகன் கே.பி.கே.சதீஷ்குமார் சென்னை டிஜிபி அலுவலகத்தில் அவரது மனைவி சுருதி பிரியதர்ஷினி மீது புகார் அளித்துள்ளார்.

KPK Sathishkumar Dowry Case
வரதட்சணை புகாருக்கு மறுப்பு தெரிவித்த கே.பி.கே.சதீஷ்குமார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 10:38 PM IST

சென்னை: சோழிங்கநல்லூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தனின் மகன் கே.பி.கே.சதீஷ்குமார். இவர் தற்போது சென்னை பெருநகர மாநகராட்சியின் 182வது மாமன்ற உறுப்பினராகச் செயல்பட்டுவருகிறார். இந்தச் சூழ்நிலையில் சதீஷ்குமாரின் சுருதி தரப்பில், கந்தன் மற்றும் சதீஷ்குமார் மீது வரதட்சணை புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

சதீஷ்குமாருக்கும் அம்பத்தூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த என்பவரது மகள் சுருதி பிரியதர்ஷினி என்பவருக்குக் கடந்த 2018 ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 600 சவரன் நகைகள் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மேலும் 400 சவரன் நகைகள் கேட்டு இரண்டு ஆண்டுகளாகக் கொடுமைப்படுத்தியதாகவும் இதை அடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சதீஷ்குமாரின் மனைவி சுருதி பிரியதர்ஷினி நேற்று ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "தான் சதீஷ்குமாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் மற்றும் அவரது மகன் மாமன்ற உறுப்பினர் கே.பி.கே.சதீஷ்குமார் அடித்துக் கொடுமைப்படுத்தி மேலும் 400 சவரன் தங்க நகைகள் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக" புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுமட்டும் அல்லாது, "தொடர்ச்சியாக கே.பி.கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்தி வந்ததாகவும்" அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுருதி பிரியதர்ஷினி கொடுத்துள்ள புகார்க்கு மறுப்பு தெரிவித்து அவரது கணவர் மாமன்ற உறுப்பினரான கே.பி.கே.சதீஷ்குமார் இன்று (பிப்.22) சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், "எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் அளித்திருப்பதாகவும், தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காகவே பொய்யான புகார் அளித்திருப்பதாகவும், தனது பெயருக்கும் தனது தந்தையின் பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக இந்தப் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக" அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு தாங்கள் பிரிந்து விட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில் தற்போது அவர் பணப் பறிப்பில் ஈடுபடுவதற்காகவே தன் மீது பொய்யான புகார் அளித்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தனது பெயரைக் கெடுக்கும் நோக்கில் பேட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பேட்டிகளை யூட்யூப்களிலிருந்து நீக்க வேண்டும்" எனவும் கே.பி.கே.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தருமபுரி மாட்டிறைச்சி விவகாரம்; ஓட்டுநர், நடத்துநர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.