ETV Bharat / state

ஜாமீனில் வெளிவந்தபின் எழும்பூர் காவல் நிலையத்திற்கு வந்த நடிகை கஸ்தூரி! என்ன காரணம்? - KASTHURI

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குகள் பதியப்பட்ட நிலையில், எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியதையடுத்து, இன்று எழும்பூர் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டார்.

எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட நடிகை கஸ்தூரி
எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட நடிகை கஸ்தூரி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 7:31 PM IST

சென்னை : இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அவருக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அதே வேளையில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்குகளில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடிகை கஸ்தூரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் எழும்பூர் போலீசாரும், மதுரை போலீசாரும் தனிப்படை அமைத்து களம் இறங்கினர்.

இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருக்கும் தகவல் எழும்பூர் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் கஸ்தூரியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : திகைத்துப்போன பாரிமுனை.. டெலிவரி பாய்ஸ் உடையில் மெத்தம்பெட்டமைன் விற்பனை.. மூன்று பேர் கைது..!

இந்நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, மனிதாபிமான அடிப்படையில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கடந்த 21ம் தேதி சிறையில் இருந்து கஸ்தூரி வெளியே வந்தார்.

தினமும் எழும்பூர் காவல்நிலையத்தில் நடிகை கஸ்தூரி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தனது வழக்கறிஞருடன் இன்று ( நவ 23) நடிகை கஸ்தூரி எழும்பூர் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, "கடந்த 4 நாட்களாக தமிழக மக்களை சந்திக்காமல் இருந்தது வருத்தமாக இருந்தது. மிகவும் மிஸ் பன்னினேன். தற்போது அனைவரையும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.