ETV Bharat / state

செலிபிரட்டி கிரிக்கெட் லீக்; சென்னை ரைனோஸ் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து! - ரஜினிகாந்த் ஜீவா புகைப்படம்

Celebrity Cricket League 2024: சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று (பிப்.29) சென்னை ரைனோஸ் அணியினர் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்துகள் பெற்றுள்ளனர்.

சென்னை
chennai
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 10:25 PM IST

சென்னை: சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 23ஆம் தேதி துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், சென்னை ரைனோஸ், கர்நாடக புல்டோசர்கள், கேரள ஸ்டிரைக்கர்ஸ், மும்பை ஹீரோக்கள், பஞ்சாப் டி ஷெர், தெலுங்கு வாரியர்கள் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இத்தொடரின் முதல் கட்ட ஆட்டங்கள் துபாயில் நடைபெற்றது. முதல் கட்டத்தில் மும்பை மற்றும் கேரளா அணிகள் மற்றும் தலா 2 போட்டிகளில் விளையாடி உள்ளன. மற்ற அணிகள் அனைத்துமே தலா 1 போட்டி மட்டுமே விளையாடி உள்ளன.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ஹைதராபாத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், சென்னை அணி நாளை (மார்ச்.01) மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் போஜ்பூரி மற்றும் கர்நாடக அணிகளுடன் விளையாட உள்ளது. இந்த நிலையில், சென்னை ரைனோஸ் அணி இன்று (பிப்.29) சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றது.

அப்போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து சென்னை ரைனோஸ் அணி வாழ்த்துகளைப் பெற்றது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள நடிகர் ஜீவா, ரஜினிகாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படங்களின் பட்டியல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.