ETV Bharat / state

“தேர்வில் தோற்றாலும் வாழ்க்கையில் தோற்கக் கூடாது” - கோவை கல்லூரி விழாவில் ஜெயம் ரவி பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 4:55 PM IST

Jayam ravi: தேர்வில் தோற்றாலும் வாழ்க்கையில் தோற்கக் கூடாது எனவும், மகிச்சியுடன் இருந்தால் வருங்காலம் உங்களைத் தேடிவரும் எனவும், கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
காதலர் தினத்தில் மனம் திறந்த நடிகர் ஜெயம் ரவி

கோயம்புத்தூர்: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் இன்று (பிப்.14) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டார். அவரது வருகையின்போது, அரங்கத்தில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் ஆரவாரத்துடன் உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய நடிகர் ஜெயம் ரவி, இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தார். காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், என்னுடைய காதலர் தினத்தை விட்டு விட்டு இங்கு வந்துள்ளேன் எனக் கூறினார். மேலும், எனக்கு நீங்கள் அனைவரும் ஒரு உறவாக இருக்கிறீர்கள் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வருங்காலம் பின்னால் ஓடாதீர்கள். இப்போது இருக்கின்ற மாதிரி மகிழ்ச்சியாக இருந்தாலே, வருங்காலம் உங்களைத் தேடி வரும் எனத் தெரிவித்த அவர், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தப்பில்லை, ஆனால் வாழ்க்கையில் தேர்ச்சி பெறாமல் போனால்தான் தப்பு என அறிவுரை வழங்கினார்.

அவரிடம் காதலர் தினம் குறித்து கருத்து கேட்டதற்கு, 18 வயது நினைவுகளை நினைவு படுத்தினால் 18 வயதில் ஒரு இன்னசென்ஸ் இருக்கும், அது காதலில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். காதல் அனைத்தையும் கடந்த ஒன்று, அனைவரையும் மதிக்க வைக்கிறது என்றார். 18 வயதில் ரசித்த காதல் பாடல் என்ன என்ற கேள்விக்கு, சிங்கிள் சைடு காதல் இருந்தபோது ரசித்த பாடல் என்னவென்றால் "மஞ்சம் வந்த தென்றலுக்கு" என்ற பாடல் என பதிலளித்து அந்தப் பாடலை பாடினார். திருமணம் குறித்த கேள்விக்கு, ஏன் திருமணம் செய்கிறோம் என்றால், உன்னுடைய வாழ்க்கையை உன்னுடன் வாழ்ந்த பெண் சொல்ல வேண்டும். அதுதான் வாழ்க்கை எனக் கூறினார்.

பின்னர், மாணவர்களின் கோரிக்கைக்கிணங்க மேடையில் நடனமாடினார். தொடர்ந்து நடனமாடும் படி கேட்டதற்கு வாய்ப்பில்லை என நகைச்சுவையாகத் தெரிவித்தார். மேலும், மாணவர்களை தம்பிகள் என்று அழைத்த அவர், தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பது பழமொழி நான் கூறுகிறேன் "அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான்" என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள சைரன் திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. அது குறித்து பேசிய ஜெயம் ரவி, சைரன் படம் அப்பா மகள் பாசத்தை எடுத்துரைக்கும் படம் எனவும், 15 ஆண்டுகளாக அப்பாக்களுக்கு நடக்கக் கூடிய கதை இது எனவும், அனைவரும் இந்த படத்தை விரும்புவர் எனத் தெரிவித்தார்.

மேலும், சைரன் படத்தில் அவர் நடித்துள்ள இரண்டு கதாபாத்திரங்கள் போலும், பொன்னியின் செல்வன் பட வசனத்தையும் பேசி அசத்தினார். அப்போது மாணவிகள் சந்தோஷ் சந்தோஷ் என ஆர்ப்பரித்தனர். அதனைத் தொடர்ந்து, சைரன் படத்தின் 10 நொடி காட்சிகள் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சைரன் படம் மிக முக்கியமான படம், குடும்பத்திற்காக இந்த படம் செய்துள்ளேன். இந்த படம் எனக்கு சவாலாகத்தான் இருந்தது. 15 ஆண்டுகால வித்தியாசங்களை இதில் அனைவரும் காண்பித்துள்ளோம். எனவே, இந்த படம் ஒரு ஆர்கானிக் ஆக வந்துள்ளது என்றார்.

இதையும் படிங்க: 'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம் தேவையற்றது' - வானதி சீனிவாசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.