ETV Bharat / state

மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்! - Vijay meet Students

Actor Vijay: நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய், விரைவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைச் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம்
பள்ளி மாணவர்களுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 12:19 PM IST

Updated : May 10, 2024, 1:45 PM IST

சென்னை: 2023-24 கல்வி ஆண்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் அண்மையில் நடைபெற்ற 12ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைவரும் இனி உயர் கல்வி இலக்குகளுடன் வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வளம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என தெரிவித்து, விரைவில் நாம் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியரை அழைத்து கல்வி விருது விழா நடத்தினார். அந்த விழாவில் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி அனைவரையும் பாராட்டினார். அதேபோல இந்த ஆண்டில் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியரை நேரில் அழைத்து பாராட்ட உள்ளார்.

இந்த வருடம் விழாவை எப்போது நடத்தலாம் என்பது தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் அதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த முறை நடிகராக மட்டும் கல்வி விருது விழாவை நடத்திய விஜய், இந்த ஆண்டு அரசியல் தலைவராக கல்வி விருது விழாவை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் மாதம் இந்த விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு எப்போது? விடைத்தாள் நகல் பெறுவது எப்படி? - 10th Supplementary Exam Date

Last Updated : May 10, 2024, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.