மதுரை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிக்கும் படங்களில் அரசியல் கருத்துகள் பெரிதும் பேசப்படுவதும் அதை ரசிகர்கள் கொண்டாடுவதுமாக உள்ளது. இவர் நடிப்பில் வெளியான தமிழன் படத்திலிருந்து தலைவா, கத்தி, மெர்சல், சர்கார் என அவரது படங்களில் அரசியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோகும் நடிகராக வலம் வருகிறார். பல நடிகர்கள் அரசியலுக்குள் வர பலத்த யோசனையில் இருந்து, ஓரளவு நடிப்புக்கான மவுசு குறைந்த பிறகு அரசியலுக்கு வருவது உண்டு. ஆனால் நடிகர் விஜய் உச்ச நடிகராக இருக்கும்போதே அரசியல் வாழ்க்கையை தொடங்கிவிட்டார். அவர் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு முதல் பிறந்த நாள் மற்றும் அவரது 50வது பிறந்த தினத்தை நாளை (ஜுன் 21) கொண்டாட இருக்கிறார்.
தங்கதேர் இழுத்து பிறந்தநாள் கொண்டாட்டம்: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர்கள், மதுரை பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து இன்று வழிப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய த.வெ.க., மதுரை வடக்கு மாவட்ட மேலூர் தொகுதி இளைஞர் அணி தொண்டர் அணி நகர ஒன்றிய நிர்வாகி, "2026ஆம் ஆண்டில் விஜய் கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவார். வலுவான கூட்டணியை அமைப்பதற்கான வியூகம் வகுக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தென்காசியில்: இதேபோன்று, விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக சங்கரநாராயணன் திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் ராஜகோபால் மற்றும் மாவட்டத் தலைவர் மாரியப்பன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சரவணன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் சங்கர், வெண்மதி ,ஹமீதுபீர் , பிரதீப், அலெக்ஸ் பழனி ,சங்கரி, ரவி, பிரவின் கணேஷ்குமார் மாரீஸ்வரன் குருமகேஷ், சூரியா, மதி, குமார், காளி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: நடிகர் சங்க தேர்தல்: மீண்டும் தேர்தல் நடத்தும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய விஷால் மேல்முறையீடு! -