ETV Bharat / state

40 ஆண்டு ஆக்கிரமிப்பிலிருந்த நிலம் மீட்பு.. ரூ.10 கோடி நிலத்தின் பின்னணி என்ன? - Encroachment Land recovery

Coimbatore Encroachment Land recovery: கோயம்புத்தூர் புருக்பீல்டு மால் எதிரே உள்ள காமராஜபுரம் பின்புறத்தில் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.

coimbatore-according-to-order-of-high-court-recovery-of-encroached-land-worth-rupees-10-crore
கோவையில் நீதிமன்ற உத்தரவின் படி 40 ஆண்டு ஆக்கிரமிப்பிலிருந்த ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 6:30 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் புருக்பீல்டு மால் எதிரே உள்ள காமராஜபுரம் பின்புறம், கடந்த 1961ஆம் ஆண்டில் 3.50 ஏக்கரில் லேஅவுட் மனைப் பிரிவு தனியாரால் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 40 அடி, சாலைக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த 40 அடி சாலையை ஒரு தரப்பினர் போலி பத்திரங்கள் தயாரித்து ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து, அங்கு மனை வாங்கிய பொன்னுசாமி என்பவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அது டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பின்னர், 2001-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, 2017 வரை நிலுவையில் இருந்தது. பின்னர், சமூக செயற்பாட்டாளர் தியாகராஜன், மாநகராட்சியிடம் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கப் புகார் அளித்தார். அதில், நடவடிக்கை இல்லாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-இல் வழக்குத் தொடுக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இவ்வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஆக்கிரமிக்கப்பட்ட 40 அடி சாலை இடத்தை மீட்க உத்தரவிடப்பட்டது. இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்த நபர் பழைய கார் விற்பனை மையம் ஒன்றை நடத்தி வந்தார். மீதம் உள்ள இடத்தை ஸ்டில் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து, ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில், மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி, அங்கிருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றினர். இதன் மதிப்பு தற்போதைய நாளில் ரூ.10 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பைக்கில் அடிபட்டதாக மருத்துவமனையில் அண்ணன் அனுமதி.. தம்பி கைதானதன் பகீர் பின்னணி! - Jolarpettai Murder

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.