ETV Bharat / state

"மக்களுக்குக் காங்கிரஸ் மீது நம்பிக்கை போய்விட்டது" - விஜயதாரணி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து ஏ.சி சண்முகம் கருத்து!

A.C.Shanmugam: விஜயதாரணி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது பாஜகவில் இணைந்துள்ளார். அப்படியானால் காங்கிரஸ் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது எனப் புதிய நீதிக்கட்சி ஏ.சி சண்முகம் தெரிவித்தார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 9:11 PM IST

A.C.Shanmugam
ஏ.சி சண்முகம்
புதிய நீதிக்கட்சி ஏ.சி சண்முகம் பேட்டி

வேலூர்: வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கே.வி குப்பம் தாலுகா, சென்னாங்குப்பத்தில் உள்ள விஜயலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏசியஸ் (ACS) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று (பிப்.24) நடைபெற்றது. இந்த முகாமில் மொத்தம் 1,370 நபர்கள் பங்கேற்றனர். வேலூர், ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 16க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற அந்த முகாமில் மொத்தமாக 756 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்ட 502 பேருக்குப் பணியாணை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி சண்முகம், "காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் பதவியில் இருக்கும்பொழுதே இணைந்துள்ளார். அப்படி என்றால் காங்கிரஸ் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதேபோல விஜயதாரணி அவர்கள் வந்திருப்பதை மனதார பாராட்டுகிறேன். ஒரு பதவியில் இருந்து ஒரு இயக்கத்திலே மாறும்பொழுது எவ்வளவு சிரமம் இருக்கும் என்பதை நான் அறிவேன்.

காங்கிரஸ் போர் இயக்கம் இந்தியாவிலேயே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்தி கூட்டணியை உருவாக்கிய காங்கிரஸ் பெயர் இயக்கம் இந்தி கூட்டணிக்குப் பொறுப்பாளராக வந்த பீகார் மாநிலத்தினுடைய முதல்வர் அவர்களே பாஜகவுடன் இணைந்து, அவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்தி கூட்டணியில் வேட்பாளர்கள் இல்லை, மேற்கு வங்காளத்தில் அவர்கள் தனித்துப் போட்டி எனக் கூறியுள்ளார்.

மோடிக்கு இணையான தலைவர்கள் எதிர்க்கட்சியிலே இல்லை. பிரதமர் மோடி 375 இடங்களுக்கு மேலாக வெற்றியைப் பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என்பதைப் புதிய நீதிக்கட்சி அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டிலே யாருடன் கூட்டணி என்று கேட்கின்றனர். மக்களுடன் யார் கூட்டணி என்பதுதான் முக்கியமே தவிர, எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது அல்ல. உதாரணமாக, மக்கள் தேர்தலில் திமுக மீது வெறுப்பு வரும் பொழுது அதிமுகவுக்கு வாக்களிக்கிறார்கள், அதிமுக மீது வெறுப்பு வரும் பொழுது திமுக வாக்களிக்கின்றனர்.

ஆட்சியிலே குறை வரும் பொழுது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆகவே, இப்பொழுது மாற்றுக் கட்சியாக பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வலமோடும், வலுவோடும் இருக்கிறது. மக்கள் மூன்றாவது அணியை, அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தருவார்கள். குறைந்தது 15 இருந்து 20 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை அடையும்.

பிரதமர் மோடி வருகிற 27 மற்றும் 28 தேதியில் தமிழ்நாட்டிற்கு வந்து, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அரசியல் மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும். நான்கு முறை போட்டிக்கு வாய்ப்பே இல்லை. ஒரு சில இடங்களில் ஒரு சில கட்சிகள் 5 சதவீதம், 7 சதவீதம் வாக்குகள் வாங்கினார்கள் என்றால், திமுக அதிமுகவைப் பிடிக்காதவர்கள் மாற்று அணையாக வாக்களித்தனர். இப்பொழுது மாற்றுச் சக்தியாக பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இணைந்து போட்டியிட்டு களத்திலே வரும்பொழுது, மூன்றாவது அணிக்குத் தான் வாக்களிப்பார்களே தவிர, நான்காவது அணி என நிச்சயமாகத் தமிழ்நாட்டில் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.