ETV Bharat / state

தாம்பரம் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றார் அபின் தினேஷ் மோதக்! - tambaram new commissioner

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 4:20 PM IST

Abin Dinesh Modak IPS: தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் பணியிட மாற்றத்தை தொடர்ந்து புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அபின் தினேஷ் மோதக்
அபின் தினேஷ் மோதக் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், நேற்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலர் அமுதா உத்தரவிட்டிருந்தார்.

அதில், தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோதக் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் மூன்றாவது காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் இன்று பதவியேற்றுக் கொண்டார். காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அவருக்கு கூடுதல் ஆணையர் மகேஸ்வரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; 200 - க்கு 200 கட் ஆஃப் எடுத்து அசத்தியுள்ள 65 பேர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.