ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்: விண்ணை முட்டிய 'கோவிந்தா' கோஷம்! - Srivilliputhur ther thiruvizha - SRIVILLIPUTHUR THER THIRUVIZHA

Aadi Pooram Chariot Festival: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 4:07 PM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயிலில், கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடிப்பூர திருவிழாவின், முக்கிய விழாவான ஆடிப்பூரத் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

பால்கோவாவிற்கு மட்டுமின்றி 'கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்' என்று பெயர் பெற்றது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் விழா மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். தற்போது இந்த திருவிழா ஜூலை 30 கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. அன்று இரவு 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் பவனி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 5ம் திருநாளான கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி ஐந்து கருட சேவையும், 7ஆம் திருநாளான கடந்த 5ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. இந்த நிலையில் 9 ஆம் திருநாளான இன்று (ஆக.7) ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.

இந்த ஆடிப்பூர தேர்த்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆடிப்பூரம் எனப்படுவது ஸ்ரீ ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும். இந்நாளில் நடைபெறும் இந்த தேரோட்டத்தில் பங்கேற்று ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னாரை தரிசனம் செய்தால், வாழ்வில் எல்லா நலன்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

அதனால், திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் என அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தால், அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என கூறப்படுகிறது. முன்னதாக, இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதுரை கள்ளழகர் சூடிக்கழைத்த வஸ்திரத்தை உடுத்தி திருத்தேரில் எழுந்தருளினர்.

இந்த தேரோட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் "கோவிந்தா.. கோவிந்தா" என்ற கோஷத்துடன் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியாகத் தேரை இழுத்தனர்.

இன்று விருதுநகர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்தனர். ஆகையால், பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1,800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கமகமக்கும் கறி விருந்து; குழந்தைகளை ஏலம் விட்ட நேர்த்திக்கடன்..களைகட்டிய புனித செபஸ்தியார் கோயில் திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.