ETV Bharat / state

ஆக்கிரமிப்பு வீட்டை இடிக்க எதிர்ப்பு.. விபரீத முடிவெடுத்த இளைஞர் உயிரிழப்பு! - Gummidipoondi encroachment issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 7:32 PM IST

Gummidipoondi Encroachment Issue: கும்மிடிப்பூண்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் புகைப்படம்
உயிரிழந்த இளைஞர் ராஜ்குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழியைச் சேர்ந்தவர் கல்யாணி. இவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கடந்த ஜூலை 4ஆம் தேதி ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றபோது, கல்யாணியின் மகன் ராஜ்குமார் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீரென வீட்டிற்குள் சென்று தாழிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்த போது உடலில் தீப்பற்றிய ராஜ்குமார் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். உடனடியாக காவல் துறையினர் தீயணைப்புக் கருவி உதவியுடன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து, அருகில் இருந்த கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.

மேலும், 50 சதவீதம் தீக்காயம் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தச் சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்தும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இதையும் படிங்க : "டெய்ரி மில்கிற்கு கிடைக்கும் மதிப்பு கிராமியக் கலைகளுக்கு கிடைப்பதில்லை" - நடிகை தீபா சங்கர் வருத்தம்! - Deepa Shankar

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.