சென்னை: சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சாமுவேல் ராஜ் (23) என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்ட சாமுவேல் ராஜ், கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இதையடுத்து கத்திப்பாரா மேம்பாலத்தில், போரூர் வழியாக செல்லும் வளைவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, மேம்பாலத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, பரங்கிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சாமுவேல் ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சாமுவேல் ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையின் மிக பரபரப்பான மேம்பாலமான கத்திப்பாராவில் இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'மாட்டிக்கினாரு ஒருத்தரு'.. ஓடும் பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ்.. பாடம் புகட்டிய திருப்பூர் போலீஸ்!