ETV Bharat / state

ஆபாச போட்டோக்களை அனுப்பிய ஐடி டீம் லீடர்.. ஒருதலைக்காதலால் கைது! - Photo Morphing crime - PHOTO MORPHING CRIME

சென்னையில் ஐடி நிறுவன டீம் லீடர் தனது டீம் மேட்டை ஒருதலையாக காதலித்த நிலையில், காதலிக்க மறுப்பு தெரிவித்ததால், ஆபாச புகைப்படங்களை அனுப்பி மிரட்டிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 9:09 AM IST

சென்னை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளங்கலை பொறியியல் பட்டதாரி, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர், அவர் டீம் லீடராக புரோமோட் ஆகியுள்ளார். அதன் பின்னர் அவரது மேற்பார்வையில் எட்டு பேர் பணியில் இருந்துள்ளனர்.

அதில் 24 வயது இளம்பெண்ணும் இருந்துள்ளார். முதலில் அவருடன் நட்பாக பழகி வந்த இளைஞர், ஒரு வருடத்திற்கு மேலாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து, அப்பெண்ணிடம் தனது காதலைக் கூறியுள்ளார். ஆனால், அப்பெண் அதனை ஏற்கவில்லை. பின்னர், பலமுறை முயற்சி செய்தும் அதற்கு பலனில்லை.

இருப்பினும், எப்படியாவது அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணிய அவர், டெலிகிராம் மூலமாக வேறு ஒரு நபர் பேசுவது போல் அப்பெண்ணிடம் பேசியுள்ளார். அப்போது, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், மாடலிங் செய்தால் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும் என பேசி வந்துள்ளார்.

இவ்வாறு இருககியில், திடீரென அதற்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இதனையடுத்து, இது போன்று அனுப்பாதீர்கள் என அப்பெண் கூறியுள்ளார். இந்த நிலையில், அப்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை அந்த பெண்ணுக்கு அனுப்பி உள்ளார். இதைப் பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஆபாச சீண்டல்.. சென்னை பெண் மென்பொறியாளர் புகாரில் ஒருவர் கைது!

பின்னர், பலமுறை மெசேஜ் அனுப்பியும் பதில் வராததால், இது குறித்து தனது தம்பியிடம் கூறியுள்ளார். எனவே, வேறு ஒரு டெலிகிராம் ஐடி மூலமாக யார் அது என தொடர்பு கொண்டு பேசிய போது, ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தனது டீம் லீடர் என தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர், இது குறித்து அவரிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இளம்பெண் பேசியபோதும், “உடனே என்னை காதலிக்க வேண்டும். இல்லையென்றால் நான் சொல்வதை எல்லாம் நீ செய்ய வேண்டும். இல்லையெனில், உன்னுடைய ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன். ஆனால், நான் சொல்வதை எல்லாம் செய்தால் புகைப்படங்களை டெலிட் செய்து விடுவேன்” எனக் கூறி மிரட்டி உள்ளார்.

ஆனால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தருவதாகக் கூறி அந்த இளம்பெண் தொலைபேசியை துண்டித்துள்ளார். இதனால் ஷாம் வேலையை ராஜினமா செய்து சொந்த ஊருக்குச் சென்று விட்டார். இதனிடையே, அப்பெண் பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் விரைந்த போலீசார், அந்த இளைஞரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உயிருக்கு உயிராக காலித்து வந்ததாகவும், தனது காதலை அந்தப் பெண் ஏற்காததால், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டோக்களை ஆபாசமாக எடிட்டிங் செய்து மிரட்டியாவது காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.