சென்னை: வடசென்னை, ராயபுரம் பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
அப்போது, அங்கு பெரிய நாகராஜ் என்கின்ற ஜார்ஜ் என்பவர் இளம் பெண்ணோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பின் காதலித்து வந்துள்ளார். ஜார்ஜ் இளம் பெண்ணிடம் இருந்து 45 சவரன் தங்க நகை, ரூ.10 லட்சம் பணம், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் என ஒவ்வொன்றாக பெற்று இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இவரது நடத்தையில் சந்தேகமடைந்த இளம் பெண் இவரை பின் தொடர்ந்ததில், இவர் இதே போன்று பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ராயபுரம் ரயில் நிலையம் அருகில் இளம் பெண் வாங்கி கொடுத்த வாகனத்தை ஜார்ஜ் சுத்தம் செய்து கொண்டிருந்த போது இளம்பெண் இது குறித்து கேட்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஜார்ஜ் நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். அதையெல்லாம் கேட்க உனக்கு உரிமை கிடையாது எனக்கூறி இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில், காயமடைந்த பெண் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் ஜார்ஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தென்காசி மாவட்டத்தில் குத்தகைதாரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கோயில் நிலங்கள்! - temple lands recovery