ETV Bharat / state

கணவனை இழந்த பெண்ணுடன் முறிந்த உறவை ஒட்டவைக்க வந்தவருடன் பழக்கம்.. ஈரோட்டில் பகீர் சம்பவம்! - extramarital affair issue - EXTRAMARITAL AFFAIR ISSUE

Extra marital affair issue: திருமணத்திற்கு மீறிய உறவில் இருக்கும் நபரை தூண்டிவிட்டு, முன்னதாக திருமணத்திற்கு மீறிய உறவிலிருந்த நபரை கொலை செய்ய முயற்சி செய்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தூண்டிவிட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 9:53 PM IST

ஈரோடு: கரூர் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்தவர் சரவணன் (42). ஆரியூர் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அன்னபூரணி என்பவருடன் திருமணமான நிலையில், இவர்களுக்கு 16 வயதில் ஜெய்சங்கர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கரூர் மாவட்டம் அத்தப்ப கவுண்டன் வலசு காலனியைச் சேர்ந்த மறைந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி ஜெயகாளியம்மாள் (30) என்பவருடன் சரவணனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சேர்ந்து வாழ்ந்து வந்த இவர் சில பிரச்னை காரணமாக பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2003-ல் சரவணன் ஊராட்சி செயலர் பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்திருந்தபோது டிரைவர் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பால்பாண்டி (43) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர் சரவணன் மற்றும் ஜெயகாளியம்மாள் இடையே ஏற்பட்ட பிரச்னை சம்பந்தமாக சமாதானப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, ஜெயகாளியம்மாள் சரவணனை விட்டுவிட்டு பால்பாண்டியுடன் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர், பால்பாண்டியனை தொடர்பு கொண்ட சரவணன் தன்னை ஜெயகாளியம்மாளுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பால்பாண்டி அவரை தாளவாடி பகுதிக்கு வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி, அங்கு வந்த சரவணனை சிக்கள்ளி கிராமத்தில் உள்ள லாரி ஓட்டுநர் கங்கப்பா (60) என்பவருடைய தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி, அவரை சிக்கள்ளி வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றதாகவும், அப்போது பால்பாண்டியன் மறைத்து வைத்திருந்த மரக்கட்டையால் சரவணனை தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

அப்போது அங்கு வந்த கங்கப்பாவுடன் சேர்ந்து சரவணனை பால்பாண்டி பலமாக தாக்கியுள்ளார். அதில் நிலை தடுமாறி விழுந்த சரவணனின் இரு கைகளையும் பின்புறம் மடக்கி கம்பியால் கட்டி, இரு கால்களையும் கம்பியால் கட்டிவிட்டு, இருவரும் சென்றுள்ளனர்.

மேலும், சரவணனுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த ஜெயகாளியம்மாள் சொல்லி தான் அடித்து கட்டிப்போட்டதாக் கூறியதோடு, ஜெயகாளியம்மாள் முன்பே அடித்துக்கொலை செய்து, இங்கேயே புதைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் சரவணன் தன்னை கட்டி இருந்ததை கழற்றி விட்டு, அருகில் மற்றொரு தோட்டத்திற்கு தப்பிச் சென்று அங்கு இருந்தவரிடம் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், இது குறித்து தாளவாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காயமடைந்த சரவணனை மீட்டு, வனப்பகுதியில் மறைந்து இருந்து கண்காணித்தனர். அப்போது, அங்கு வந்த பால்பாண்டியன், கங்கப்பா ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

மேலும், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் ஜெயகாளியம்மாளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் மனைவி.. நெல்லையில் தந்தை குடும்பத்துடன் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.