ETV Bharat / state

கூவம் ஆற்றில் கலக்கப்படும் மலக்கழிவுகள் - வீடியோ ஆதாரம் வெளியீடு - COOUM RIVER - COOUM RIVER

CHENNAI COOUM RIVER: சென்னை கூவம் ஆற்றில் கழிவுநீரை அகற்றும் லாரிகள் மூலம் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் கால்வாயில் வெளியேற்றப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

லாரிகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர்
லாரிகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 1:13 PM IST

சென்னை: ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களின் எல்லையில் பேரம்பாக்கம் அருகே தொடங்கும் கூவம் ஆறானது சென்னை தீவுத்திடல் அருகே கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் வரை தூய்மையான ஆறாகவும் விவசாயத்திற்குப் பயன்படும் நீராகவும் ஓடிவரும் கூவம், அதன் பின்னர் சென்னைக்குள் நுழைந்தவுடன் கருப்பு நிறத்தில் சாக்கடையாக மாறிவிடுகிறது.

இதனைத் தடுக்க தமிழக அரசு பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை ஆயிரக்கணக்கான கோடிகளில் செலவிட்டு மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் சாக்கடையாக இருக்கும் கூவம் ஆறு இன்றுவரை மாறவில்லை. இந்நிலையில் கூவம் ஆறு சாக்கடையாக இருக்க முக்கிய காரணங்களில் ஒன்று இதுதான் என சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

லாரிகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர் (Credit - ETV Bharat Tamil Nadu)

அந்தப் பதிவில் செப்டிக் டேங்குகளில் இருந்து எடுக்கப்படும் மலக்கழிவுகள் நேரடியாக கூவம், கால்வாயில் லாரிகளில் இருந்து கலக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதற்கான வீடியோ ஆதாரத்தையும் லாரியின் பதிவெண்ணுடன் அவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக விரைவில் விரைவான விளக்கம் அளிக்க உள்ளதாகவும், இதனைத் தமிழக காவல்துறையும் அரசும் உடனே தடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் செப்டிக் டேங்க் கழிவுகளும் மலக்கழிவுகளும் நேரடியாக கூவம் ஆற்றில் கலக்கும் ஆதாரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சுதந்திர தினவிழா: சென்னையில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. வழித்தட விபரங்கள் உள்ளே..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.