ETV Bharat / state

பத்தாண்டுகளை கடந்த தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை திட்டம்; 13.98 லட்சம் உடல்களை சுமந்து தொடரும் பணி! - Free Hearse Service

Free Hearse Service in Tamil Nadu: கடந்த 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை மூலம் தற்போது வரை, 13 லட்சத்து 98 ஆயிரம் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களில் அவர்களின் உறவினர்களிடம் இலவசமாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை திட்டம்
தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை திட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 10:57 PM IST

Updated : Aug 5, 2024, 11:09 PM IST

சென்னை: இறந்தவர்களின் உடலை மருத்துவமனையில் இருந்து சுமந்து சென்று, மரணித்தவர்களின் சொந்த ஊர்களில், அவர்களின் சொந்த, பந்தங்களில் அவர்களின் உடலை ஒப்படைக்கும் அர்பணிப்பான பணியை தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் செய்து வருகின்றன. தமிழ்நாடு இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் மூலம் இதுவைர 13 லட்சத்து 98 ஆயிரத்து 556 உடல்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுமந்துச் செல்லப்பட்டுள்ளன.

தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை திட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கடந்தாண்டில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 320 உடல்களையும், நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை 39 ஆயிரத்து 840 உடல்களையும் சுமந்து சென்றுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை இலவசமாக அனுப்பி வைப்பதற்காக இலவச அமரர் வாகனம் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன், கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.

இந்த வாகனம் தேவைப்படுவர்கள் 155377 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டால் ஊர்தி இலவசமாக அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், 194 அமரர் ஊர்தி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. நடப்பாண்டு ஜூலை மாதம் வரையில் மட்டுமே, 39 ஆயிரத்து 840 உடல்கள் மருத்துவமனையில் இருந்து, அவரவர்களின் உறவினர்களிடம் சேர்த்துள்ளது.

சேவை எப்படி வழங்கப்படுகிறது?: இந்த இலவச அமரர் ஊர்தி சேவையை அரசுடன் இணைந்து வழங்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ (GVK EMRI) நிறுவனத்தின் சென்னை மாவட்ட மேலாளர் ரமேஷ் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "சென்னை மாவட்டத்தில் இலவச அமரர் ஊர்திக்கு 24 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 155377 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு பதிவு செய்வார்கள். அதன் பின்னர் இறந்தவர்களின் உறவினர்களிடம் மருத்துவமனை உடலை ஒப்படைப்பதற்கான வழிமுறைகளை முடித்துவிட்டு வருவதற்குள் வாகனத்தை ஒதுக்கீடு செய்து தயார் நிலையில் வைத்திருப்போம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கு உடலை கொண்டு செல்வோம். தமிழ்நாடு மட்டும் அல்லாமல் மாநில எல்லை பகுதியில் 100 கி.மீ தூரத்திற்கு இலவசமாக உடலை எடுத்துச் செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் தங்கி வேலைச் செய்பவர்கள் இறந்து விட்டால் அவர்களின் உடலைபதப்படுத்தி, ரயில் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.

அதேபோல், ஒருவர் விபத்தில் அடிப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி இறந்தாலும், விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி, அதனை பிரேதப் பரிசோதனை முடிந்து உடலை எடுத்துச் செல்வதற்கு காவல்துறையினர் வாகனத்தை பதிவு செய்வார்கள்.

அவர்கள் அளிக்கும் விவரங்கள் மற்றும் காவலரின் அடையாள எண்ணையும் பெற்றுக் கொண்டு வாகனத்தை ஒதுக்கீடு செய்வோம். விபத்து நடந்த இடத்தில் இறந்து விட்டாலும் அவர்களின் உடலை எடுத்து வந்து பிரேத பரிசோதனைக்கு பிறது, அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்கிறோம். வெளிநாடுகளில் இறந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் வரும் உடலையும் பெற்றுச் சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கிறோம்.

மக்கள் அடையும் பயன்கள்: மேலும், ஒரே வாகனத்தில் 2 உடல்களை எடுத்துச் செல்லும் வசதி கொண்ட வாகனமும் சென்னயில் உள்ளது. ஃப்ரீசர் வசதி கொண்ட வாகனங்களும் உள்ளன, அவற்றை தொலைதூரத்திற்கு உடலை எடுத்துச் செல்ல பயன்படுகிறோம். மேலும், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம், கன்னியாகுமரி செல்வதற்கு 40 முதல் 50 ஆயிரம் வரையில் செலவாகும்.

தமிழ்நாடு அரசு இந்த சேவையை இலவசமாக அளிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் உடலை எடுத்துச் செல்லும் போது, மக்கள் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் கொண்டுச் செல்ல முடிகிறது. தற்போது இதற்காக 36 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது" என தெரிவித்தார்.

இது குறித்து இலவச அமரர் ஊர்தி வாகன ஒட்டுநர் ராமநானதன் கூறும்போது, "கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்த சேவயில் பணியாற்றி வருகிறோம். இறந்தவர்களின் உடலை அவர்களின் உறவினர்கள் கூறும் இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்துவிடுகிறோம். இத்திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன் அடைகின்றனர்" எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு பாதிப்பு; நிவாரண நிதி வழங்கிய திமுக எம்எல்ஏ க.அன்பழகன்!

Last Updated : Aug 5, 2024, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.