ETV Bharat / state

தோட்டத்தில் பழம் பறித்த பழங்குடியின வாலிபரை கள்ள துப்பாக்கியால் சுட்ட நபர்! - Tribal youth shot - TRIBAL YOUTH SHOT

Tribal Youth attacked in Dindigul: திண்டுக்கல் அருகே தோட்டத்தில் தொடர்ந்து பழங்களை பறித்து வந்ததில் ஏற்பட்ட தகராறில் பழங்குடியின இளைஞரை கள்ள துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுடப்பட்ட நபர்
சுடப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 9:31 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த தாளக்கடை பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்பவரது மகன் வெள்ளையன் (18). இவர், திண்டுக்கல் அடுத்த தவசிமடையைச் சேர்ந்த சவேரியார் (65) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், அடிக்கடி பழங்களை திருடி செல்வதாகவும், இதனால் இரு குடும்பத்தின் இடையே முன்பகை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சவேரியார் தோட்டத்தின் வழியாக நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு 3 மணிக்கு வெள்ளையன் நடந்து சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த சவேரியார் தான் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி வைத்து வெள்ளையனை சுட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் வெள்ளையப்பனுக்கு தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த வெள்ளையனை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பின்னர்,மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வெள்ளையனை தாக்கிய் சவேரியார் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் சவேரியாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை.. நூலிழையில் தப்பிய விவசாயி! வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.