திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஜெரோம் (38). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கு வள்ளியூர் அருகே சிங்கார தோப்பைச் சேர்ந்த செல்வி என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
எனவே, குடும்ப பிரச்னை காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக செல்வி கணவரைப் பிரிந்து தனது தாயாரின் வீட்டில் வசித்து வருகிறார். இருவரும் சமாதானம் ஆகாத நிலையில், செல்விக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : எஸ்பிஐ ஏடிஎம்-ஐ மட்டும் குறிவைத்தது ஏன்? - வடமாநில கொள்ளையர்களிடம் நடந்த விசாரணையில் வெளியான திடுக் தகவல்!
இதனையறிந்த ஜெரோம் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென ஜெரோம் தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்துகொண்டதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
![தற்கொலையை கைவிடுக](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-09-2024/22553084_su.jpg)
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜெரோமின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஜெரோமிற்கு நேற்று 5வது ஆண்டு திருமண நாள் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-09-2024/22553084_whatsup.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்