சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் அண்ணல் காந்தி தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி (37). கூலி தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவியும் அபிராமி மற்றும் புகழேந்தி என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி சென்னையில் இருந்து லாரி லோடு ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டி சென்றுள்ளார்.
அதன் பிறகு விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே சாராயம் வாங்கி குடித்துவிட்டு, இரண்டு பாக்கெட் சாராயம் வாங்கி தனது பையில் வைத்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார். சென்னை வந்த பிறகு தன்னிடம் இருந்த இரண்டு பாக்கெட் கள்ளச்சாராயத்தையும் குடித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், கிருஷ்ணசாமிக்கு நேற்று (வியாழக்கிழமை) வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு கே.கே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது கூலி தொழிலாளி கிருஷ்ணசாமி மேல்சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி ஒரு பாக்கெட் 20 ரூபாய் விதம் நான்கு பாக்கெட் சாராயம் வாங்கி குடித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இவரிடம் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து அதை வாங்கி வந்திருப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: "இனியாவது முதலமைச்சர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்" - தவாக தலைவர் வேல்முருகன்!