ETV Bharat / state

பெட்டியைத் திறந்தால் வெள்ளை நோட்டுகள்.. மோசடி கும்பலை சுற்றி வளைத்த ஈரோடு போலீசார்! - Fake Currency Note Gang Arrest - FAKE CURRENCY NOTE GANG ARREST

Fake Currency Notes Cheating: ஈரோட்டில் ஆசைவார்த்தை கூறி ரூ.30 லட்சத்திற்கான போலி ரூபாய் நோட்டுகளுடன் கூடிய வெள்ளைத் தாள்களை கொடுத்துவிட்டு, ரூ.20 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி ரூபாய் நோட்டுகளுடன் கைது செய்யப்பட்டவர்கள்
போலி ரூபாய் நோட்டுகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 3:04 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள சின்னதம்பி பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் சொந்தமாக செங்கல் சூளை மற்றும் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது உறவினர் ஒருவரின் மூலம் சாமிநாதன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

போலி ரூபாய் நோட்டுகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது, சாமிநாதனிடம் கருப்புப் பணம் இருப்பதாகவும், அதனை மாற்ற உதவி செய்தால் அதிக லாபம் தருவதாகவும் கூறியதோடு, முதலில் மூன்று ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பரிசோதித்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை பரிசோதனை செய்ததில் அது உண்மையான ரூபாய் நோட்டுகள் என தெரியவந்ததை அடுத்து கருப்புப் பணம் மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, ஈரோடு நாச்சியப்பா வீதிக்கு வந்த சாமிநாதன் உள்ளிட்ட சிலர், முத்துசாமியிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, ரூ.30 லட்சத்திற்கான போலி ரூபாய் நோட்டுகளுடன் கூடிய வெள்ளைத்தாள்கள் அடங்கிய பேக் ஒன்றை கொடுத்துவிட்டு விரைந்துள்ளனர்.

பணம் இருக்கும் பையைத் திறந்து பார்த்த போது பணம் இருக்கும் கட்டில் மேலேயும் கீழேயும் 500- ரூபாய் கலர் ஜெராக்ஸ் பணம், மற்றவை அனைத்தும் வெள்ளைத் தாள்கள் என இருப்பதைக் கண்டு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துசாமி, மோசடி குறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்டதாக சாமிநாதன், ரமேஷ் மற்றும் கார் ஓட்டுநர் பிரபு ஆகியோரை கைது செய்து இரண்டு கார்கள் மற்றும் போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: தகாத உறவால் வாலிபர் அடித்துக் கொலை; 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.