ETV Bharat / state

குடும்பத் தகராறில் நீட் தேர்வைத் தவறவிட்ட மாணவி.. திருப்பத்தூரில் நடந்தது என்ன? - A Student Missed NEET Exam

A Student Missed NEET Exam: திருப்பத்தூரில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை புகைப்படம்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை புகைப்படம் (Credits - Etv Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 3:24 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கமல்நாதன் - இலக்கியா தம்பதி. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், கமல்நாதனின் அக்காவான மணிமேகலை என்பவரின் மகன்களான கோதண்டன் (33) மற்றும் மோகன் குமார் (30) ஆகிய இருவரும், அவ்வப்போது கமல்நாதனின் 18 வயது மகளிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், கோதண்டன் சென்னையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்தச் சூழலில், நேற்று (மே 4) மாலை 6 மணியளவில் கோதண்டன் மற்றும் அவரது சகோதரர் மோகன் குமார் ஆகிய இருவரும் கமல்நாதனின் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கமல்நாதனின் மகள் கூச்சலிட்டுள்ளார். இதனை அறிந்த அவருடைய பெற்றோர், கோதண்டன் மற்றும் அவரது சகோதரர் மோகன் குமார் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாது, கமலநாதன் குடும்பத்தினரை கோதண்டன் மற்றும் மோகன் குமார் தாக்கியதாகவும், இந்த தாக்குதலில் கமலநாதன் அவருடைய மனைவி இலக்கியா, அவருடைய மகள் மற்றும் இதனை தடுக்கச் சென்ற கோதண்டன் மற்றும் மோகன் குமாரின் தாயான மணிமேகலை ஆகியோர் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதன் தொடர்ச்சியாக, பலத்த காயமடைந்ததாகக் கூறப்படும் கமலநாதனின் குடும்பத்தினர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து பாதிப்படைந்த கமல்நாதனின் 18 வயது மகள் கூறுகையில், "நான் நீட் தேர்வுக்காக அரும்பாடுபட்டு படித்து வந்தேன். தற்போது இவர்களால் எனது நீட் தேர்வு கனவு பாதிப்படைந்துள்ளது. மேலும், நான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தில் தற்போது தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

ஆனால், அவை அனைத்தையும் கோதண்டன் மற்றும் அவருடைய தம்பி மோகன் குமார் கெடுத்துவிட்டனர். ஆகவே, இது குறித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீட் தேர்வு தொடக்கம்: விழுப்புரத்தில் 5,008 பேர் எழுதுகின்றனர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.