ETV Bharat / state

பெலிக்ஸ் ஜெரால்டு மீதான வழக்கு: ஒருநாள் போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி - Felix Gerald

YouTuber Felix Gerald: பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வீடியோ விவகாரத்தில், தனியார் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அவர் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Photo of YouTuber Felix Gerald at Trichy Mahila Court Walked with police Women
திருச்சி மகிளா நீதிமன்றத்தில் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு, பெண் போலீஸ்களுடன் நடந்து சென்றபோது எடுத்தப் புகைப்படம் (Credits: ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 7:34 AM IST

திருச்சி: பெண் போலீசார் பற்றி அவதுாறு பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தமிழக பெண் போலீசார் பற்றி தரக்குறைவாகவும், அவதுாறாகவும் என்ற யூடியூப் சேனலுக்கு, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பேட்டி அளித்தார். இது தமிழக பெண் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சவுக்கு சங்கர் மீது கோவை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் பெண் போலீசார் கொடுத்த புகார்களின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், முசிறி பெண் டிஎஸ்பி யாஸ்மின் என்பவர், சவுக்கு சங்கரின் பேட்டியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீதும், அவரை பேட்டி எடுத்த யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கர், திருச்சி வழக்கிலும் கைது செய்யப்பட்டார். வழக்கில் சிக்கிய மற்றொருவரான பெலிக்ஸ் ஜெரால்டை, கடந்த 10 ஆம் தேதி திருச்சி தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்து, ரயிலில் திருச்சி அழைத்து வந்தனர். இந்த நிலையில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்துக்கு 13 ஆம் தேதி பெலிக்ஸ் ஜெரால்டு அழைத்து வரப்பட்டார்.

பின், அங்கிருந்து, திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நீதிபதி ஜெயப்பிரதா இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பெலிக்ஸை, மே 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பெலிக்ஸ், திருச்சி மத்திய சிறைக்கு பெண் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர் கடந்த 17‌ஆம் தேதி அன்று திருச்சி மத்திய சிறையில் இருந்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து சென்றனர். அவர் அங்கேயே மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தொடர்புடைய வழக்கில் பெலிக்ஸ் ஜெரால்டின் பிணை குறித்த விசாரணை நேற்று நடைபெற்றது.

இதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா, பெலிக்ஸை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். மீண்டும் நாளை (அதாவது இன்று) மதியம் 3 மணிக்கு ஆஜர்படுத்த கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார். மேலும் இவரது ஜாமீன் மனு மீதான விசாரணை மே 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு பெண் காவலர்கள் பாதுகாப்பில் அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர்! - Youtuber Savukku Shankar

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.