மதுரை: தென்காசியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ வெங்கட்ரமணா உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தென்காசி மாவட்டத்தில் 54 சென்ட் பட்டா இடம் எனக்கு சொந்தமாக உள்ளது. அனைத்து சர்வே ஆவணங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்த போது நத்தம் பட்டாக்களில், உரிமைதாரர்களின் பெயர்களுக்கு பதிலாக அரசு நிலம் என தவறுதலாக பதிவு செய்யப்பட்டு விட்டது.
இதன் காரணமாக நத்தம் நில உரிமையாளர்களின் பெயருக்கு பதிலாக அரசு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆகவே, தமிழகத்தில் நத்தம் பட்டா உரிமைதாரர்களின் பெயருக்கு பதிலாக அரசு நிலம் என பதிவேற்றம் செய்திருப்பதை உடனடியாக திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: இருவர் விடுதலையும் செல்லாது; செப்.9 முதல் மீண்டும் விசாரணை.. அமைச்சர்கள் நேரில் ஆஜராக ஐகோர்ட் அதிரடி உத்தரவு!