ETV Bharat / state

ஆக்கிரமிப்பில் உள்ள தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை 3 மாதத்தில் மீட்க உத்தரவு! - Temple Land Encroachment Case - TEMPLE LAND ENCROACHMENT CASE

Temple Land Encroachment Case: தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க திருவிடைமருதூர் டிஎஸ்பி தலைமையில் போலீசார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து செயல்பட்டு 3 மாதத்தில் மீட்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tanjore Pasupadeeswarar Temple Land Encroachment Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 7:46 PM IST

மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சை அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது. தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற சிவதலமாக விளங்கும் இந்த கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 1000 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலங்களின் தற்போதைய மதிப்பு சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைக் குத்தகைக்குக் கொடுக்காமல், கோயிலின் டிரஸ்டிகளே தங்களுக்குள் பகிர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இதற்கு ஆண்டு ஒன்றுக்கு 575 ரூபாயும், நெல்லும் கொடுக்கின்றனர். இந்த நிலங்களை முறையாகக் குத்தகைக்கு வழங்கினால், பல லட்சங்களைக் குத்தகையாகவும் வசூலிக்கலாம். இதனால் கோயிலுக்கு வருமானம் அதிகரிக்கும். ஆனால், அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், 162 வெவ்வேறு சர்வே எண்களில் உள்ளன. ஆனால், அவை முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அடையாளம் காண்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைப் பலர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலை தொடர்ந்தால், அந்த நிலங்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே போகும் நிலையும் உருவாகும். எனவே, இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றை அளவீடு செய்து, மீட்டெடுத்து, முறையாகப் பராமரிக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே, தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அடையாளம் கண்டு, அளவீடு செய்து, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு முறையாகப் பராமரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது அரசு கோயில் நிலங்களை மீட்பதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது. மனுதாரர் கொடுத்த கோரிக்கையை ஏற்று இதுவரை சுமார் 850 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு நில அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

மேலும், 20 சதவீத இடங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இருப்பதால் மீட்பதில் சிக்கல் உள்ளது. விரைவில் காவல்துறை மூலம் மீட்கப்படும் என தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதி, கோயில் நிலம் 80% இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 20 சதவீத கோயில் நிலங்களை மீட்பதற்கு காவல்துறை உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த நிலங்களை மீட்க திருவடைமதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் போதிய பாதுகாப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், ஆக்கிரமிப்பு உள்ள சொத்துக்களை மூன்று மாதத்தில் முறையாக அளவீடு செய்து மீட்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.